ஈரானிடம் போலியான யுத்த கப்பல் - பயந்துபோன அமெரிக்கா
அமெரிக்காவின் யுத்த கப்பல் போன்று ஈரான் போலியான கப்பல் ஒன்றை தயாரிப்பதாக அமெரிக்க தரப்பு செய்மதி புகைப்படங்களை காட்டி வெளியிட்டுவந்த பிரசாரத்திற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. அந்த கப்பல் திரைப்படம் ஒன்றுக்காக அமைக்கப்பட்டது என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
இந்த போலியான கப்பல் ஈரான் கடற்பகுதியில் மிதக்கும் அமெரிக்க விமான தாங்கி கப்பல் போன்றே இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்கா அது குறித்து பல ஊகங்களை வெளியிட்டு வந்தது.
இது யுத்த தந்திரமாக இருக்கலாம்; என்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகின.
இந்நிலையில் ஈரான் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்காக இந்த போலி கப்பல் தயாரிக்கப்படுவதாக குறிப்படப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க யுத்த கப்பல் 290 பேருடன் பயணித்த ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்திய சம்பவமே விபரிக்கப்பட்டுள்ளது. எனினும் பஹ்ரை னிலுள்ள அமெரிக்க கடற்படையின் பேச்சாளர் Nஜசன் சலட், இந்த போலி கப்பல் ஒரு திரைப்பட அரங்குபோன்று இல்லை என்று ராய்ட்டருக்கு குறிப்பி ட்டுள்ளார். "இது உண்மையான விமான தாங்கி கப்பல் இல்லை என்பது எமக்கு தெரியும்.
இது எம்மிடம் இருப்பது போன்ற ஒன்று. ஆனால் இது எதற்காக என்பதுதான் புதிராக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு ஈரான் அதிகாரிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment