'ஜெனீவாவில் முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஆவணத்தில், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவுமில்லை'
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜெனீவாவில் வழங்கியுள்ள ஆவணத்தில் அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் கிடையாது. அமைச்சர் ஹக்கீமின் கருத்து அன்றி அந்தக் கட்சியின் முடிவே இங்கு முன்வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மிகவும் கவனமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் நேரடியாக எங்கும் அரசாங்கம் மீது குற்றஞ் சுமத்தப்படவில்லை.
இலங்கை வந்த நவநீதம் பிள்ளை. முஸ்லிம் காங்கிரஸையும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் தனித்தனியாகவே சந்தித்தார். கட்சியின் நிலைப்பாட்டையே ஜெனீவாவுக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் என்னதான் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது?முஸ்லிம்களை ஏமாற்றும் கண்துடைப்பா இது?
ReplyDeleteபள்ளிகள் உடைக்கப்பட்ட நேரத்தில் உருப்படியாக இயங்காத ஹகீம்,திடீரென்று ஜெனீவாவுக்கு அறிக்கை விட்டு அசத்தியிருப்பாரா?இல்லை, தேர்தல் காலம் என்பதால்,வெறும் கதையை மட்டும் கட்டியிருப்பாரா?முஸ்லிம்கள் சிந்திக்கனும்.இன்னுமின்னும் உங்கள் தலைவர்களை நம்பி ஏமாராதீர்கள்.