'முஸ்லிம் காங்கிரஸ் மீது, சமூகம் வைத்துள்ள நம்பிக்கையை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன' ஹரீஸ்
ஸ்ரீலங்கா என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். 'அல்ஹம்துல்லாஹ்'
இத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகவும், கட்சித் தலைமையினை பலப்படுத்துவதற்காகவும் வாக்களித்த கம்பஹா, கொழும்பு, களுத்துறை மற்றும் ஏனைய மாவட்ட முஸ்லிம் சகோதரர்கள், இளைஞர்கள், பெரியார்கள், உலமாக்கள், பெண்கள், கட்சிப் போராளிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் கட்சியின் தேர்தல் வெற்றிக்காக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் குறிப்பாக இளைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தேர்தலில் எமது கட்சி பெரும் சவால்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் எமது ஆசனங்களை மீளவும் உறுப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
Fool yourself rather bootlics. You better get loss.
ReplyDeleteஉண்மைதான், சரியான முறையில் பார்த்தால் முஸ்லிம்காங்கிரஸ் இம்முறை படுதோல்வி அடைந்துள்ளது.
ReplyDeleteஇன்னுமொரு விடயம்: தேர்தல் காலங்களில் உமது கட்சிகள் ”முஸ்லிம்” என்ற பெயரைத்தாங்கி இருப்பதனால்தான் பலர் இதுவரை ஒன்றும் பேசாமல் இருக்கின்றார்கள் காரணம் நமக்குள் எதற்கு வீண்வாதம் மற்றவர்கள் முன்னிலையில் எனும் காரணம்தான். இல்லையேல் உம்மைப்போன்ற பிரதி நிதித்துவங்களும் கட்சிகளும் கண்ணாளிலே காணாமல் போயிருக்கும். ஏதோ மக்கள் போடும் பிச்சையை எடுத்துத்தான் நீங்களெல்லம். ஏதாவது ஒரு பதவிக்கு வருகின்றீர்கள். பதவிக்கு வந்த பின் மக்களை மூடர்களாக எண்ணுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிச்சை எடுத்தாவது பிச்சை கொடு என்ருதாநே நமது மார்க்கம் சொல்லியிருக்கிரது நண்பா அதைதான் ரவூப்ஹக்கிம் செய்கின்ரார் அது தவரா நீங்கள் போடும் வாக்குபிச்சையால் முடிந்ததை செய்கின்ரார் அதிலும் பாதியை பக்கத்து ஊர்காரனுக்கு கொடுத்ததால்தான் மீராசாஹீப் கட்சியையே விட்டு ஓடிவிட்டார் தெரியாதா இதுதான் ஒற்ருமையின் வழற்சி
ReplyDelete