Header Ads



சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தருவேன் - அமைச்சர் அதாவுல்லா (படங்கள் இணைப்பு)

(யு.எம்.இஸ்ஹாக்) 

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்தார் மற்ற கிராமங்களுக்கோ , ஏனைய சமூகங்களுக்கோ பாதிப்பு எழாவண்ணம் சாய்ந்தமருதுக்கான  உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தருவேன் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆயிரக்கணக்கான சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் உறுதியளித்தார் 

சாய்ந்தமருதுக்கான  தனியான ஒரு உள்ளூராட்சி சபை கோரிக்கையை முவைத்து  நேற்று 24.03.2014 இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திலேயே இந்த நிகழ்வுகள் இடம் பெற்றது . கிழக்கு மாகான அமைச்சர் உதுமாலெப்பை,மாகாண சபை உறுப்பினர்களான ரீ,எல்.அமீர்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் அடங்கலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




4 comments:

  1. வாழ்த்துக்கள் சிராஸ் and சாய்ந்தமருது மக்களின் முயற்சி வெற்றியளிக்க. சாய்ந்தமருதுக்கான தனிப்பிரதேச சபை தேவை இன்றியமையாதது.

    ReplyDelete
  2. ippadiththan machchan irakkamaththukkum thaniyana piradesa safai tharuwen akkarapaththu nilaththaum serththu endu appa sonnar atha ulla iyya pinna awarthan mari nindarungo

    ReplyDelete
  3. People has to think before supporting this guys, to get the position they will do it whatever

    ReplyDelete
  4. இவரது ஊரில் கட்டப்பட்டு இதுவரையிலும் மக்களூக்கு கொடுக்கப்படாமல் இருக்கும் சுனாமி வீட்டுத்திட்டத்திற்கே இவறால் ஒரு முடிவு கானமுடியாமல் இருக்கும் போது சாய்ந்தமருது மக்கள் தாகம் தீப்பாராம் சொல்லாதே யாரும் கேட்டால் சொன்னாலும் தாங்கமாட்டார் இப்படியோரு அரசியலை............

    ReplyDelete

Powered by Blogger.