Header Ads



தெஹிவளை தாருஸ்ஷாபி பள்ளிவாசல் தொடர்ந்து இயங்கலாம் - நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

(Tm) தெஹிவளை, தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி ஹங்கொடவில நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மேன்முறையீட்டு தீர்ப்பு இன்று (07), முஸ்லிம்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது.

ஹொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை வீதி தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்புக்கள் உள்­ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி ஹங்கொடவில நீதவான் நீதிமன்று அண்மையில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சு சுஹைர், மைத்திரி குணரத்தினா வழக்கறிஞர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டது.

குறித்த பள்ளிவாசலானது நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்ட வகாப் சபையின் அங்கிகாரம் பெற்றதாகும். ஆனால், புத்தசாசன அமைச்சின் சுற்றுநிரூபத்தினை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் என வழக்கறிஞர்கள் தமது வாதத்தினை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், ஒலி மாசடைதல் சம்பந்தமாக குறித்த பள்ளிவாசலில் எந்தவித தடயங்களும் இல்லை என மறுத்து, அப்பள்ளியின் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திச் செல்ல அனுமதியளித்து தீர்ப்பளித்துள்ளார்.

6 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்..... முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் MR. M.M. SUHAIL அவர்களுக்கும் அவர்களின் வழக்கரிஞர்களுக்கும் மற்றும் இந்தப்பள்ளிவாசலுக்காக முன்னின்று உழைத்தவர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக....... ஆமீன்!

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்..... முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் MR.M.M. SUHAIL அவர்களுக்கும் அவர்களின் வழக்கரிஞர்களுக்கும் மற்றும் இந்தப்பள்ளிவாசலுக்காக முன்னின்று உழைத்தவர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக....... ஆமீன்!

    ReplyDelete
  3. Allah is great...alhamthulillaah..

    ReplyDelete
  4. for our patients allah will grant us more and more victory,,,,,,,,,,,,,“O you who have believed, seek help through patience and prayer. Indeed, Allah is with the patient.” (Qur’an, 2:153)

    ReplyDelete

Powered by Blogger.