Header Ads



அரசாங்கம், எங்களை தாராளமாக வெளியேற்றலாம், அதற்கு நாங்கள் தயார் - ரவூப் ஹக்கீம் அதிரடி


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகம் சவால்களைச் சந்திக்கின்ற போது சமூகத்தை பாதுகாக்கின்ற பணியை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டுவருவதாக தெரிவித்த நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ்ட தலைவருமான ரவூப் ஹக்கீம்  அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தை காட்டிக் கொடுக்கும் பணியை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த கிழக்கு மாகாண சபையில் தவிசாளராக பதவிவகித்த தேசிய காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட கிண்ணியாவைச் சேர்ந்த சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இணைந்துகொண்ட வைபவம் வெள்ளிக்கிழமை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாடில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் ரவூக் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் கூறியதாவது,

 எமது கட்சியின் புதிய உறுப்பினராகவும் கட்சியின் அங்கத்துவ விவகாரஙகளுக்கான பணிப்பாளராகவும் சட்டத்தரணி எச்.எம்.எமட். பாயிஸ் உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் இந்நிகழ்வின் உண்மையானத் தாக்கம் மிகவும் விசாரமானது. சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் கடந்த மாகாண சபையில் தவிசாளராக பதவி வகித்தவர். இறுயாக நடந்த மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டவர்.  

திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் பலப்படுத்துகின்ற விடயமாக   இது மாறும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும்  இருக்கிறது. அதிலும் முக்கியமாக சட்டத்தரணி பாயிஸ் தேசிய காங்கிரஸில் இருந்து நீங்கி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் இந்தக் காலகட்டம் மிக முக்கியமானது.

கடந்த மாகாண சபை தேர்தலின் போது மாகாண சபையில் ஆட்சித் தரப்பில் இருந்த மூன்று பேர் எங்கள் கட்சியோடு இணைந்து கொண்டார். இது திருகோணமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெற்றது. இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெற்கில் இரண்டு மாகாண சபை தேர்தல்களுக்கு முகங்öõகாடுக்கின்ற  சூழ்நிலையில் சட்டத்தரணி பாயிஸ் திருகோணமலை மாவட்டத்தில் கணிசமான அரசியல் அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டவர் என்ற அடிப்படையில் அவரது இணைவு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையுமென  எதிர்பார்க்கின்றோம்.

திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எமது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வழிகாட்டலில் கட்சி நடவடிக்கைளை முன்னெடுப்பது பாரிய உந்துசக்தியாக பாயிஸ் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்போடு அவரை மனப்பூர்வமாக எமதுகட்சியோம இணைத்தக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார்.

 எனவே கட்சியில் வெவ்வேறு கட்டங்களில் பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் வந்து இணைந்து கொண்டு கட்சிக்கு மேலும் உர மூட்டுகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  எமது மறைந்த தலைவர் அஷ்ரப் எங்களை விட்டு பிரிந்த வருடத்தில்   ஏராளமான ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் சராகரியாக வந்து எங்களது கட்சியில் இணைந்து கொண்டனர். 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிறுத்தி அம்பாறை மாவட்டத்தில்  பிரபல ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் இணைந்து கொண்ட பாரிய நிகழ்வு  ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் இடம்பெற்றது.

அநேகருக்கு நினைவிருக்கலாம் துரதிர்ஷ்டவசமாக பெருந்தலைவர் அவ்வாண்டு எங்களை விட்டு பிரிந்தாலும் கூட அவர் கட்டியம் கூறிய அத்தனை விடயங்களும் அச்சொட்டாக நடந்து முடியும்  விதத்தில் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆசனங்களை வென்று கொள்ளும் விடயத்தில் எமது வியூகங்கள் அச்சொட்டாக  கைகூடியதை அத்தேர்தலில் கண்டோம். அத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் ஆனால் மரச்சின்னத்தில் நான் கண்டி மாவட்டத்தில் வெற்றி பெற்றேன்.

அத்தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்று மட்டுமல்ல நான் சபாநாயகராக வருவேன் என்றும் அவர் என்னை ஆரத்தழுவி ஆசிர்வதித்திருந்தார். அந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை நாங்கள் வென்றோம். ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறினோம். ஆனால் உட்கட்சி பூசல்கள் தலை தூக்கின. அவை எமது கட்சியின் வளர்ச்சியில் பலவிதமான தடைகளை ஏற்படுத்தினாலும் என்னைப் பொறுத்த மட்டில் அவற்றால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடவில்லை.

 வழமையாக குறிப்பிட்ட ஒரு தேர்தல் நடக்கும்பொழுது இந்தக் கட்சியில் வந்துசேரும் ஒருபடலம் நடப்பதுண்டு. அந்தகு மாற்றமாக தேர்தலுக்கு இன்னும் எவ்வளவோ காலம்  எஞ்சியிருக்கத்தக்கதாக முன்கூட்டியே வந்து சட்டத்தரணி பாயிஸ் எங்களோடு வந்து இணைந்து கொள்கிறார். கட்சியை தாம் பலப்படுத்த வேண்டும் என்ற மனப்பூர்வமான உள் உணர்வுடன் தூய்மையான உள்ளத்தோடு எங்களோடு வந்து அவர்  இணைந்து கொள்கிறார். சிலர் நிபந்தனைகளோடு வந்து தேர்தல் முடிந்த கையோடு திரும்பிப்போன வரலாறும் உண்டு. இது  கடந்காலங்களில் அனுபவங்களாக இருந்துள்ளன.  சொந்த அரசியல் சுயலாப நோக்கில் செய்யப்படும் குறுகிய அரசியல் முன்னெடுப்பாக பாயிஸின் இணைவை நாம் காணவில்லை. 

சுயநலமில்லாத அரசியல் என்று 100 வீதம் இருக்க முடியாது. குறைந்தளவு சுயநலம் 50 வீதம் சமூக நலன் 50 வீதம்  என்றாவது ஒவ்வொருவரிடத்திலும் காணப்பட வேண்டும்  என நான் வழமையாக விநயமாக வேண்டிக் கொள்வதுண்டு. நல்ல கட்சியோடு தன்னை முழுமையாக சங்க மிக்க செய்ய வேண்டும். என்ற நல்லெண்ணத்தோடு அவர் எமது கட்சியோடு இணைந்து கொள்கிறார். 

எங்களுக்கென்று ஒருவகிபாகம் இருக்கின்றது. அரசாங்கத்தில் இருந்தாலும் நாங்கள் மிகவும் வெளிப்படையாக ஒளிவுமறைவு இன்றிச் செயற்படும் இயக்கமாக தொடர்ந்தும் இயங்குகிறோம். யாருடைய தயவிலும் தங்கியிருக்க வேண்டும் என்ற தேவை இல்லாத இயக்கம் இது. அத்துடன் நாங்கள் அமைச்சுப் பதவிகளை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.  

இதை சகோரர் பாயிஸ் அனுபவபூர்வமா கண்டிருக்கிறார். அவர் முன்னிருந்த கட்சியின் அமைச்சர் ஒருநாள் கூட அமைச்சுப் பதவி  இல்லாமல் கட்சி தலைவரக  நீடிக்க முடியாதவர். அமைச்சராக  இல்லாமல் கட்சித் தலைவராக ஒருநாள் கூட அவரல் இருக்க முடியாது. நிறையபேரின் கதை இதுதான். அவர்கள்  எமது கட்சியின் ஊடாக அரசியல் முகவரியையும் அடையாளத்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் அமைச்சர் பதவிக்காக வலிந்த போனார்கள். 

இந்த அரசாங்கத்தில் நாங்கள் இணைந்துள்ளமை சம்பந்தமாக ஜனாதிபதி இன்றுகூட என்னிடம் வெளிப்படையாகவே  கேட்டார். நாங்கள் தாமாகவே விலக வேண்டியது இல்லை. வேண்டுமானால் எங்களை தாராளமாக வெளியேற்றலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. கட்சி எமது அடையாச் சின்னம் சமூகத்தை பாதுகாக்கின்ற போராட்டத்தை எமத கட்சி கச்சிதமாக செய்யுட். 

தெளிவான சலனமற்ற இயக்கம் என்ற அடிப்படையில் எந்த சலாலுக்கும் தயாரான இயக்கம் என்ற அடிப்படையில் இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது  சமூகத்தின்  பிரச்சினையை  அரசாங்கத்துள்ளும் வெளியேயும்  பேசுகின்ற கட்சியாகவும் உள்ளொன்றும் புறமொன்றும்  பேசாத கட்சியாகவும் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இந்தக்கட்சியில் கருத்துச் சுதந்திரத்தை நாம் தாராளமாக அனுமதித்து இருக்கின்றோம்.

ஜனநாயக நாட்டில் சுதந்திரம் கட்சிக்குள் பிரதிபலிக்க வேண்டும் ஏதாவது ஒரு தருணத்தில் அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகின்ற விடயமாக வரும் பொழுது கட்சி சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து விளக்கங்களை கோரும் கட்சியின் அங்கீகாரம் இல்லாமல்  பாரதூரமாக எதையாவது பேசினால் அதற்கு நடவடிக்கை எடுக்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறது.

 சிலர் சில சந்தர்ப்பங்களில் கட்சியின் தலைமை ஒரு மெத்தனப்  போக்கை கடைபிடிக்கிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவெடுக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இது தனிநபர்களுக்கான இயக்கமல்ல.  இந்த இயக்கம் ஒரு வீரியமான பலமான இயக்கம். இதற்கு இன்னும் பலம் சேர்க்கின்ற பணியை சட்டத்தரணி பாயிஸின் இணைவு ஏற்படுத்தியிருக்கின்றது. கட்சி அங்கத்துவத்தை மேலும் ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன் அவருக்கு அதற்கான பணிப்பாளர்  பதவியை வழங்கிகௌரவித்து இருக்கின்றோம்.

 கட்சியின் கட்டமைப்பில்  ஏற்பட்டுள்ள பலவீனங்களை களைய வேண்டிய அவசியம் இருக்கின்றது. புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தல் வட்டார முறையில் வரும் நடைமுறை உருவாகியிருக்கின்றது. ஆகையால் கட்சியை கிளைகளினூடாக பலப்படுத்துக்கிற ஒரு பாரிய பணிகாத்திருக்கின்றது.  இவ்வாறான ஒரு பதவியின் மூலம் அந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு சட்டத்தரணி பாயிஸ்  எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளார். கட்சியின் பிரசார நடவடிக்ரைககளிலும் அவர்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 

4 comments:

  1. இந்த தலைவர் இன்னும் ..... 'மீசையில் மன்படாத' கதைதான் பேசுகிறார். பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக தமது சொந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது மௌனம் காத்து அரசாங்கத்தை திருப்திப்படுத்திய அதே நேரம் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததுதான் இவருக்கு கிடைத்த பரிசு. இவ்வாரான ஒரு முடிவு இவருக்கும் இவரது கட்சிக்கும் நிச்சயம் 'கிடைக்கும்' என்று எடுத்துரைத்த எம்மக்களை விரும்பியோ விரும்பாமலோ புறக்கனித்தார்.

    பள்ளிவாசல் உடைப்புக்கள் பற்றி 'எனக்கு எதுவும் தெரியாது' என்று வெளிப்படையாக தெரிவித்த எமது ஜனாதிபதிக்கு 'எமக்கும் எதுவும் தெரியாது' என்பது போல இவரும் ஏனைய முஸ்லீம் தலைவர்களும் இருந்தார்கள். இப்போது 'அரசாங்கம் எங்களை தாராளமாக வெளியேற்றலாம்' என்று சொல்வதை விட 'நாங்கள் தாராளமாக உடனேயே வெளியேறுகிறோம்' என்று சொன்னால் கொஞ்சம் 'மரியாதையாக' இருக்குமள்ளவா......??

    ReplyDelete
  2. புலிகள் சாதாரணமாக ஆட்னடகொண்று தினாறுவிடும். ஆணல் இவா்கள் அப்படி அல்ல
    எணழனல வாக்களித்த மக்கணள தின்றுனககலுகுவார்கள் மோணடகளில் ஹுரிய எதாவது
    இவா்கள் தோர்வுக்கு பிண் நடந்ததாக உல்லதாக வறழறு உல்ழதா தண்மனவி ஷுரி நடகதணவ
    ஊண்டா இவா்கள் வெளியேறுவதால் எனழகளுக்கு எந்தகவணழயும் இல்ணல இவரல் பளண்
    அணடயும் பணக்காறா்கலுக்குதாண் திண்ரட்டம் எண்கழள் தணலவா் அஸ்ரப் இறுந்தால் நாண்கள் சூசயிட் பண்ன ஹுடதயார்

    ReplyDelete
  3. Hello mim irsath, What nonsense is this?

    ReplyDelete
  4. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்து கொண்டு நீதி அமைச்சராக இருக்கும் காரணத்தால் கிடைத்த வசதிகளை கொண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முஸ்லிம் நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இரகசியமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தது மிகவும் சாதுரியமான செயல். இதை விட்டு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து எதுவும் ஆகியிருக்காது.

    ReplyDelete

Powered by Blogger.