இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம்
(எம்.எம்.ஜபீர்)
1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இறைச்சிக்காக மாடுகளைஅறுத்தல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம்.
கால்வாய் நோய் காரணமாகநாட்டின் பலபாகங்களில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் மற்றும் இறைச்சிவிற்பனைதொடர்பாக 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்ததடைகள் சில நிபந்தனைகளுக்கமைவாக நாட்டின் சிலபகுதிகளில் நீக்கப்பட்டுகால்நடைஉற்பத்திசுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிப்பணிப்பாளர் (டாக்டர்) சுல்பிகார் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது தாய்லாந்தில் பாதுகாப்பான உணவுதொடர்பாக ஐரோப்பிய யூனியனால் நடாத்தப்படும் விசேடமகாநாட்டில் கலந்துகொண்டுள்ள(டாக்டர்) சுல்பிகார் அபூபக்கர் அவர்களைத் தொடர்புகொண்டபோது இது பற்றிஅவர் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கால்வாய் நோயின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டுபிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்ததடை தடைகுறிப்பிட்ட நிபந்தனைகளுக்கமைவாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தடைநீக்கப்பட்டுள்ளபிரதேசங்களில் பின்வரும் நிபந்தனைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
(1) விலங்குகளைஅறுத்தல் மற்றும் அவற்றின் இறைச்சிமற்றும் தோல் உள்ளிட்ட ஏனைய உடற்பாகங்களையும்,விற்றல்,விற்பனைக்குவிடுதல்,விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல்,களஞ்சியப்படுத்துதல்,வழங்கல்,விநியோகித்தல்,மற்றும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டுசெல்லுதல் ஆகியன இக்கட்டளையின் அட்டவணையில் குறிப்பிடப்படுப்பட்டுள்ளநிபந்தனைகளுக்கமைவாகமாத்திரம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
1. 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கவிலங்குகள் சட்டம், இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டம்,விலங்குச்சித்திரவதைக் கட்டளைச்சட்டம் மற்றும் தொந்தரவுகள் கட்டளைச்சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைவாகவிலங்குகள் அறுக்கப்படல் வேண்டும்.
2. பின்வரும் இடங்களில் ஏதேனுமொரு இடத்தில் மாத்திரம் விலங்குகள் அறுக்கப்படல் வேண்டும்.
(1) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டஅல்லது 1971 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கஉள்ளூராட்சிஅமைச்சர் (அதிகாரங்களைக்கையளித்தல்) சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டஉத்தியோகத்தர் ஒருவரால் அங்கீகரிக்கப்பட்டபொதுவிலங்கறுமனை.
(2) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 14(அ) பிரிவின் கீழ் ஏற்புடையஅதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டஒரு இடம்.
(3) உள்ளூராட்சிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதனியார் விலங்கறுமனை.
3. மேலே 2 ஆம் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளஒவ்வொரு இடம் தொடர்பிலும் பின்வரும் அனுமதிப்பத்தரங்கள் பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
(1) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கதேசியசுற்றாடல் சட்டம் அல்லதுமாகாணசபையால் இயற்றப்பட்டசுற்றாடல் தொடர்பானநியதிச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுற்றாடல் பாதுகாப்புஅனுமதிப்பத்திரம்.
(2) தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டபதிவுச்சான்றிதழ்.
4. பின்வருவோர் மாத்திரமேவிலங்குகளைஅறுத்தலில் ஈடுபடுதல் வேண்டும்.
(1) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ்,அக்கட்டளைச்சட்டத்தின் 5, 6 மற்றும் 7 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாகவழங்கப்பட்ட இறைச்சிக்கடைக்காரர் அனுமதிப்பத்திரத்தைஉடையவர்.
(2) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ்,வழங்கப்பட்டதற்காலிக இறைச்சிக்கடைக்காரர் அனுமதிப்பத்திரத்தைஉடையவர்;. அல்லது
(3) இறைச்சிக்கடைக்காரர்கள் கட்டளைச்சட்டத்தின் 18(1) ஆம் பிரிவின் கீழ்,வழங்கப்பட்டவிசேடஅனுமதிப்பத்திரத்தைஉடையவர்.
5. அதிகாரமளிக்கப்பட்டவிலங்குவைத்தியரொருவரால் பரிசீலிக்கப்பட்டுகால்வாய் நோய் மற்றும் மற்றும் ஏனைய குறித்துரைக்கப்பட்டநோய்களால் பாதிக்கப்படாததெனவும்,அறுப்பதற்குப் பொருத்தமானதெனவும் உறுதிப்படுத்தப்பட்டவிலங்குகள் மாத்திரம் அறுக்கப்படல் வேண்டும். அவ்வாறுஉறுதிப்படுத்தப்பட்டஒவ்வொருவிலங்கும் அவ்விலங்கின் சொந்தக்காரரின் செலவில் குறித்தவிலங்குவைத்தியரால் காதடையாளமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
6. அறுக்கப்படவுள்ளஒவ்வொருமாடும் 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கவிலங்குகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாககாதடையாளமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
7. அதிகாரமளிக்கப்பட்டஉத்தியோகத்தர் ஒருவரின் முன்னிலையிலேயேமற்றும் மேற்பார்வையின் கீழ் விலங்குகள் அறுக்கப்படல் வேண்டும்.
8. விலங்குகள் அறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அறுப்பவரால் பின்வரும் ஆவணங்கள் அதிகாரமளிக்கப்பட்டஉத்தியோகத்தருக்குசமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(1) இறைச்சிக்கடைக்காரர் அனுமதிப்பத்திரம்
(2) அறுக்கப்படும் விலங்குஅறுப்பவருக்குச் சொந்தமானதென்பதைஉறுதிப்படுத்தும் ஆவணம்.
(3) அதிகாரமளிக்கப்பட்டவிலங்குவைத்தியரொருவரால் பரிசீலிக்கப்பட்டுகால்வாய் நோய் மற்றும் மற்றும் ஏனைய குறித்துரைக்கப்பட்டநோய்களால் பாதிக்கப்படாததெனவும்,அறுப்பதற்குப் பொருத்தமானதெனவும் உறுதிப்படுத்திவழங்கப்பட்டசான்றிதழ்
9. அறுக்கப்பட்டவிலங்கொன்றிலிருந்துபெறப்பட்ட இறைச்சிஅல்லதுஅதன் பாகங்கள் அதிகாரமளிக்கப்பட்டஉத்தியோகத்தர் ஒருவரால் வழங்கப்பட்டஅனுமதிப்பத்திரமின்றிவிலங்குகொல்களத்திலிருந்துஅகற்றப்படலாகாது.
10. உள்ளூராட்சிமன்றமொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் மாத்திரமே இறைச்சிவிற்பனை, இறைச்சியைக் களஞ்சியப்படுத்துதல்,விற்பனைக்குக் காட்சிப்படுத்தல்,வழங்கல்,அல்லதுவிநியோகித்தல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
11. அதிகாரமளிக்கப்பட்டமிருகவைத்தியரால் சான்றுபடுத்தப்பட்ட இறைச்சிமாத்திரமேவிற்கப்படவோ,விற்பனைக்குகாட்சிப்படுத்தப்படவோ,வேண்டும்.
12. அதிகாரமளிக்கப்பட்டமிருகவைத்தியரால் அங்கீகரிக்கப்பட்டவாகனமொன்றிலேயே இறைச்சிமற்றும் உடற்பாகங்கள் ஏற்றியிறக்கப்படல் வேண்டும்.
13. அதிகாரமளிக்கப்பட்டமிருகவைத்தியரால் சான்றுபடுத்தப்பட்ட இறைச்சிமற்றும் உடற்பாகங்கள் மாத்திரமேஏற்றியிறக்கப்படல் வேண்டும்.
(2) அதிகாரமளிக்கப்பட்டமிருகவைத்தியஅதிகாரியொருவரின் எழுத்திலானஅனுமதியின்றிமேற்குறிப்பிட்டஅரசாங்கமிருகவைத்தியஅதிகாரிகள் பிரிவிலிருந்துவிலங்குகள், இறைச்சிமற்றும் தோல் உள்ளிட்டஉடற்பாகங்கள், (சாணம் உள்ளிட்ட) விலங்குக்கழிவுகள்,மற்றும் பண்ணைக்கழிவுகள் ஆகியனவேறிடங்களுக்குஅகற்றப்படவோஅல்லதுகொண்டுசெல்லப்படவோ கூடாது.
Post a Comment