கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் பல்வேறு தேவைப்பாடுகளை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் - அமீர் அலி
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கொழும்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வையும் அம்மக்களுக்கு ஒரு தலைமைத்துவத்தை பெற்றுகொடுக்கவுமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றது என முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மேல்மாகாண சபைத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.லாபிரை ஆதரித்து தெமட்டகொடை கிளிப்டன் சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் மற்றும் மேல்மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் பல வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இங்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என தமக்கு விரும்பிய கட்சிகளுக்கு இதுகாலவரை வாக்களித்தும் எந்த பயனையும் பெறவில்லை என்பதை இப்போது உணர்ந்த காரணத்தினால்தான் எமது அ.இ.ம.காங்கிரஸில் மக்கள் அணியணியாக வந்து சேர்கிறார்கள். அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான இக்கட்சி சமூக உணர்வு கொண்டு செயற்படும் ஒரு கட்சியாகும். இன, மத, கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் சேவையாற்றி வருகின்றது. இக்கட்சியில் தமிழ், சிங்கிள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
கொழும்பு மாவட்டத்தில் நாம் முதற்தடவையாக போட்டியிடுகின்றோம். இம்மக்கள் காலங்காலமாக கைகிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் மற்றும் தமக்கு விரும்பிய கட்சிகளுக்கும் வாக்களித்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தாலும் அவர்களால் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது போய்விட்டது. கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் பல்வேறு தேவைப்பாடுகளை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில், கல்வியில் மற்றும் இன்னோரன்ன விடயங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.
இம்மக்களை வழிநடாத்தக்கூடிய சரியான தலைமையோ இம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய சிறந்த தலைவர்களோ இல்லை. இவ்வாறான பல காரணங்களை வைத்துத்தான் மேல்மாகாண சபை தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் எமது கட்சியில் உள்ளவர்கள் நீதி, நியாயத்துடன் செயற்படக்கூடிய சமூக உணர்வுள்ள இளம் வேட்பாளர்களாக இருகின்றார்கள். மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கின்றார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் வெற்றிபெறும் வேட்பாளர்கள் சும்மா இருக்க முடியாது. எமது கட்சிக்கென்று ஒரு கொள்கை இருக்கின்றது. வாக்களித்த மக்களை ஏமாற்றவோ, அவர்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்க ஒருபோதும் இருக்க முடியாது. கட்சியின் தலைமையுடன் மக்களுக்கான பணியினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கல்வியின் தேவை அறியாத மக்களாக கொழும்பு முஸ்லிம்கள் இருகின்றார்கள். யுத்தத்தால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணத்துக்கு இன்று சென்று பார்த்தால் கல்விக்கு அப்பிரதேச மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை காணமுடியும். ஆப்பிரதே மக்கள் அரசியல் வாதிகளிடம் இன்று கேட்பதெல்லாம் பாடசாலையை கட்டித்தாருங்கள் பாடசாலைக்கு அதை தாருங்கள் இதைத்தாருங்கள் என்றுதான். அந்த நிலை கொழும்பு வாழ் முஸ்லிம்களிடத்திலும் வரவேண்டும்.
அதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் மக்களுக்கு சிறந்த சேவை செய்யக்கூடிய துடிதடிப்பான இளம் வேட்பாளகளை தேர்தலில் இறக்கியுள்ளோம். அதிலொருவராக இப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.லாபிரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெற வைப்பதன் மூலம் உங்கள் பிரதேசத்தின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்
Post a Comment