Header Ads



நீ மன்னாரை பார்த்துக்கொள் - அமைச்சர் றிசாத்திற்கு தெஹிவளை மேயர் எச்சரிக்கை


(அஷ்ரப் ஏ சமத்)

தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள்  நிருவாகிகள் நேற்று இரவு 05-03-2014 தெஹிவளை நவாஸ் முஸ்தபாவின் வீட்டில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனை சந்தித்தனர்.

கடவத்தை பள்ளிவசால் சம்பந்தமான வழக்க இன்று நடைபெறுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிருடன் பேசிஉள்ளதாகவும் இவ் வழக்கில் சிங்கள சட்டத்தரணிகளை சேர்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளேன். இவ் வழக்கு கட்டாயம் வெற்றிபெரும். நீதிமன்றம் ஊடாகவே நமக்கு  நிரந்தரமாக இப் பள்ளியை நடாத்துவதற்கு ஒரு  தீர்ப்பு கிடைக்கும். அதற்காக எல்லோரும்  பிராத்திக்கும் படி அமைசச்ர் றிசாத்  பதியுத்தீன் தெரிவித்தார்.

இவ்வாறான விடயங்களை கையாழ்வதற்கே தெஹிவளை கல்கிசைப் பிரதேசத்தில வாழும் முஸ்லீம்கள் எனக்கு ஆகக்குறைந்தது 2 பிரதிநிதிகளைப் பெற்றுத்தாருங்கள். அதனுடாகவே கொழும்பில் எங்களுக்கு கதைப்பதற்கும், இப் பிரதேசத்தில் மாகாணசபையோ, பாராளுமன்றத்திலோ முஸ்லீம் பிரதிநிதித்துவம் இல்லை. ஆகவே தான் தெஹிவளையில் எமது கட்சியில் 3 பிரதிநிதிகளை நிறுத்தியுள்ளோம்.  எமது கட்சிக்கு முஸ்லீம் பிரதிநிதித்துவம் இல்லை. ஆகவே தான் 3 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உதவுமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டனர். உங்கள் பள்ளிவசால் சம்பந்தமாக பேசுவதறகு நாங்கள் சென்றால் தெஹிவளை மேயர் தனசிரி றிசாத்பதியுத்தீன் ஏன் தெஹிவளைக்க வருகின்றீர். நீர் மன்னாரைப் பார்த்துக்கொள்ளும்படி கூறினார். இப் பள்ளிவிடயமாக தெஹிவளை ஓ.ஜ.சியுடன் முரண்பட்டடுள்ளேன். கிராண்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைதொடர்பாக ஜ.சி.பியுடன் வாக்குவாதப்பட்ட விடயங்கள் பற்றியும் ஜனாதிபதியிடம் கூடச் சொல்லியிருக்கின்றார்கள்.

ஓவ்வொரு பள்ளிவாசல் ஊடாக 100 பேர் வீதம் 500 பேர் ஒன்று கூடக்கூடியதாக தெஹிவளை சஹ்ரான் மண்டபத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இஷhத் தொழுகையின் பின் கூட்டமொன்றை நடாத்துவதற்கும் அங்கு வருகைதந்த அணைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளால்  தீர்மாணிக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.