நாரம்மல மெட்டிவெலகெதர பிரதேசத்தில் பதற்றம்
(இ. அம்மார்)
நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டிவெலகெதர பிரதேசத்தில் இரு குழுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஒரு பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒருவர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து அவர் குளியாப்பிட்டிய சிரேஷட பொலிஸ் அத்தியட்சகர் சேரசிங்கவுடன் தொடர்பு கொண்ட போது உடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாரம்மலப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மெட்டிவெலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் காணமற் போன மாட்டைத் தேடி அயல் கிராமத்திற்குச் சென்ற வேளையில் அவ் விரு இளைஞர்களையும் பாதையோரத்தில் கதை;துக் கொண்டிருந்த மற்றுமொரு குழுவியைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கே ஏன் வந்தது எனக்கோரி கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன்போது அங்கு அவதானித்திருந்த மனிதாபமுள்ள நபர்கள் அவர்களைப் பாதுகாத்து சமாதான அடிப்படையில் சமாளித்து தாக்குதல்களுக்குள்ளான இந்த இளைஞர்களை அவர்களுடைய வீட்டை நோக்கி அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞர் குழு மீண்டும் இந்த முஸ்லிம் இளைஞர்களுடைய வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன் இன்று 7.00 மணி அளவில் 100 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்துவதற்காக திரண்டு வந்தனர். அவ்வேளையில் மெட்டிவெலககெதர இளைஞர்கள் ஒரு திரண்டு நின்றதால் திரும்பிச் சென்று விட்டனர்.
பின்னர் இவ்வூரை நோக்கி மோட்டார் சைக்கலில் வந்தவர்களுக்கு தாக்குதல் நடத்தியுள்ளர். இந்த தாக்குதலின் போது ஒருவர் கடுமையாகன தாக்குதலுக்குள்ளாகி நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கிராமத்திற்று செல்கின்றவர்களை கொஸ்கொல்ல சந்தியிலிருந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இந்தப் பிரதேசத்திலிருந்து தொழில்களுக்குச் சென்று இன்னும் வீடு திரும்ப முடியாத நிலையிலும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment