திருகோணமலை - அக்கறைப்பற்று பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
இடைநிறுத்தப்பட்ட அக்கறைப்பற்று திருகோணமலை பஸ் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அக்கறைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கான பஸ் சேவை அதிகாலை 3.00 மணிக்கு சேவையில் இருந்தது. இதனால் மத்திய, மாகாண அரசாங்க ஊழியர்கள் மற்றும் திருகோணமலைக்கான தேவைகள் நோக்கி வரும் பொதுமக்கள் காலை 7.00 மணிக்கு வந்து சேர்ந்து தமது வேலைகளை முடிக்கக் கூடியதாக இருந்தது.
இவ் பஸ் சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டது. இதனால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அரச ஊழியர்கள், பொதுமக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
எனவே, இச்சேவையை மீண்டும் அமுல்படுத்துமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ விமலவீர திஸாநாயக்க அவர்களிடமும், கல்வி, காணி, காணி அபிவிருத்தி அமைச்சரின் செயலாளரிடமும், கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இவ் பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment