தற்போதைய அரசாங்கத்திற்கு ஆணவமும், அகங்காரமும் பிடித்துள்ளது - ரவூப் ஹக்கீம்
(அஸ்ரப் ஏ சமத்)
யுத்தத்தை வெற்றிபெற்றோம் என்ற அகங்காரத்திலும் ஆணவமும் பிடித்த ஒரு அரசாகவே இந்த அரசாங்கத்தை நாம் காண்கின்றோம். ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவுப் ஹக்கீம் இன்ற(20) இரவு தெஹிவளையில் உள்ள ஹில் வீதியில் உள்ள ஹில் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக் கூட்டத்தில் கிழக்கில் உள்ளவர்கள் தெஹிவளையில் நிரந்தரமாக வாழும் கல்வியலாளர்கள் அரச துறையினர்களை சிலரை அழைத்து நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர் பசீர்சேகுதாவுத், செயலாளர் நாயகம் ஹசன் அலி, மற்றும் சிரேஸ்ட தலைவர் முழக்கம் மஜீத், நசீர் அகமட், ஹனிபா மொளலவி மற்றும் முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் பலரும் கலந்து கொண்டனர்
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவித்தாவது,
இந்த நாட்டில் பெரும்பாண்மையான முஸ்லீம்களின் சக்த்தியைக் கொண்டதொரு இயக்கம் தான் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியாகும். இந்த நாட்டில் முஸ்லீகளுக்கு பிரச்சினைகள் என்று வரும்போதெல்லாம். அதனை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை இக் கட்சிக்கே உள்ளது. அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் அரசுடன் பேசினோம். ஆனால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் சேர்ந்து கூட்டாகவும் சொல்லிவந்தோம். இப் பிரச்சினைகளை அரசு கவணத்திற்கு எடுக்கவில்லை ஆகவேதான் முஸ்லீம்களுக்கு வட கிழக்கு யுத்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தொட்டு யுத்தம் முடிந்தபிறகு ஏற்பட்ட சம்பவங்களையெல்லாம் மணித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்தோம்.
இந்த அரசு ஜெனிவா பிரேரணையின் வாக்கெடுப்பு தினத்திலேயே இந்த தேர்தலை நடாத்துகின்றது. அவர்கள் அதன் மூலம் சரவதேசத்திற்கு சொல்ல இருப்பது நீங்கள் என்னதான் தீர்மாணம் எடுத்தாலும் இந்த அரசுடன் இந்த நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்கே. ஆகவே தான் முஸ்லீம் சமுகமும் இத்தினத்தில் முஸ்லீம்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் முஸ்லீம் கட்சியில் முஸ்லீம் சமுகமும் ஒட்டுமொத்தமாக உள்ளது. என்பதைக் காட்டுவதற்காக அணிதிரள வேண்டும்.
மறைந்த தலைவர் அஷ;ரப் அவர்கள் இக் கட்சியை ஆரம்பித்து முதன் முதலில் கொழும்பில் மேல் மாகணத்தில் போட்டியிட்டு இக் கட்சிக்கு உறுப்பிணர்களை வெற்றிபெறச் செய்தார். இந்தக்;கட்சிதான் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிக்கு அடுத்த படியாக கூடிய ஆசனங்களையும் ;மக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட 3வது கட்சியாகும்.
அரசுக்கு 18ஆம் அரசியல் யாப்புக்கு வாக்களித்து இந்த ஜனாதிபதியை மீள தேர்தலில் கேட்பதற்கும் எமது 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் வாக்கு அளித்தார்கள். இந்தக் கட்;சிதான் சந்திரிக்காக அம்மையாரை ஆட்சியில் அமர்த்தியது. பிறகு அவரின் ஆட்சியை கவிழ்;த்தது. அதற்கு முன்னர் காலம்சென்ற ஆர்.பிரேமதாசவை ஜனாதிபதியாகுவதற்கும் உதவியது. ரணிலின் 2வருட ஆட்சியை ஏற்படுத்தியமையாகும். ஆனால் இவ் அரசாங்கம் முஸ்லீம் காங்கிரசை உள் அழைத்து அதனை பலவீணப்படுத்து முயற்சிப்பது. அரசுக்குள் உள்ள ஏனைய முஸ்லீம்கட்சிகளுக்கு உதவி இதனை பலவீணப்படுத்தப்பார்ப்பது. இதற்கு உதாரணம் அம்பாறை மாவட்டத்தில் கிழக்குமாகணத் தேர்தலில் எங்களுக்கு 6 ஆசனம் கேட்டபொழுது அதனை தடுத்தது. ஆனால் அல்லாஹிவின உதவியினால் நாங்கள் தனித்து போட்டியிட்டதனால் தான் நாங்கள் கிழக்கின் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக 7 மாகாணசபை உறுப்பினர்களைப் பெற்றோம்
ஆனால் அண்மையில் நடந்த மத்திய மகாணத்தில் தேர்தலின்போது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு 9 சீட்டும், திகாம்பரத்துக்கு 3 சீட்டும் வழங்கி சகல சீட்டுக்களும் வெற்றிபெற்றனர். இதனையே நாம் அம்பாறையிலும் கிழக்கு தேர்தலின்போது கேட்டோம் எங்களுக்கு ஒரு நீதி மத்திய மகாணத்தில் ஒரு நீதியா என அண்மையில் பசில் ராஜபக்சவிடம் நான் எடுத்துக் கூறியபோது அவர் பதில் ஏதும் சொல்லாமல் தடுமாறினார்.
இந்த அரசு முஸ்லீம் சமய விவகார அமைச்சு, மற்றும் ஹிந்து விவகார அமைச்சுக்களை இல்லாமல் செய்து இவ்வாறான அமைச்சுக்களையெல்லாம் பௌத்த அமைச்சின் கீழ்தான் இருக்க வேண்டும் என கோட்பாட்டைக் கொண்டுவந்தால்தான் சமய விவகார பிரச்சினைகள் இந்த நாட்டில் எழுந்துள்ளன. இதற்கு உதாரணம் ஹஜ் விவகாரத்தில் வருடா வருடம் ஹஜ் கோட்டா விவகாரத்தில் பிரச்சினைகளை எற்படுத்தி அதனை அரசு வேடிக்கை பார்க்கின்றது.
ஆனால் இந்த அரசு ஜ.தே.கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிகளையெல்லாம் பலவீணப்படுத்திவிட்டனர் இரண்டாக உடைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் முஸ்லீம் காங்கிரசையும் பங்காலி கட்சியாக்கி பலவீணப்படுத்தப் பார்க்கின்றனர். ஆனால் ஒரு போதும் இக் கட்சியை அவர்கள் பலவீணப்படுத்துவதற்கு தொண்டர்கள் ஆகிய நீங்களே ஒரு குடையின் கீழ் இந்த கட்சியை கொண்டுவருதல் வேண்டும். தமிழ் தேசிய முன்ணனி கூட வட கிழக்குக்குள்ளேதான் உள்ளது. ஆனால் எமது கட்சி முஸ்லீம்கள் இந்த நாட்டில் எங்கெல்லாம் மூலை முடுக்குகளில் எல்லாம் சிதறி வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அதனை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு இயக்கமாக மாறியுள்ளது.
ஆனால் இடை இடையே சில நாடகங்கள் நடக்கும் அதில் ஒரு அங்கமாக சாய்ந்தமருதூரில் ஒருவர் கட்சி மாறுவதாக தகவல் - அரசுக்குள் இருந்துகொண்டு தமது பிரச்சினைகளை எதிர்கட்சி உள்ளவர்கள்;தான் தமது பிரச்சினைகளை பேசுவார்கள் சர்வதேசத்துக்கு கொண்டு செல்வார்கள். ஆனால் அந்த நடைமுறையில்லாமல் எமது பிரச்சினைகளை ஆகக்குறைந்தது ஆளும் அரசிற்குள் இருந்து கொண்டு இதனை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றால்தான் எதிர்காலத்தில் மீள முஸ்லீம்களுக்கு ஏதாவது அசம்பவிதங்களைச் செய்வதற்கு சற்று சிறிது யோசிப்பார்கள்.
அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களே!
ReplyDeleteஅதிகம் துள்ளாதீர்கள். மறைந்த அமைச்சர் அஷ்ரபுக்கு நடந்ததை நினைத்துப் பாருங்கள். உண்மையை உரைப்பதில் கோழையாக இருக்க வேண்டாம். ஆனால் நிதானமாகவும், புத்தியிடனும் நடந்து கொள்ளுங்கள்.