இஸ்லாமியர்களுக்கு இடையே நடக்கும் உள்நாட்டு சண்டை ஜிகாத் அல்ல - ஹபீஸ் சையத்,
பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சையதிடம் ஜிகாத்துக்காக தனது மூன்று மகன்களை ஒருவர் வழங்கியுள்ளார்.
அபு ஹெய்தர் என்ற அந்த ஜமாத்-உத்-தவா உறுப்பினர், லாகூர் அருகேயுள்ள நன்கனா சாஹிப் என்ற இடத்தில் நேற்று நடந்த அவ்வமைப்பின் ஊழியர் கூட்டத்திலேயே தனது மகன்களை ஹபீசிடம் ஒப்படைத்தார். புனிதப் போரான ஜிகாத்தில் ஈடுபடவும், உங்களது போராட்டங்களுக்கு துணை நிற்கவும் எனது மகன்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என அவர் ஹபீசிடம் தெரிவித்தார்.
அப்போது அவரை வீரத்தந்தை என்று ஹபீஸ் பாராட்டினார். புனிதப்போர் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. அது நம்பிக்கை துரோகிகளுக்கு எதிராக நடத்தப்படுவது. இஸ்லாமியர்களுக்கு இடையே நடக்கும் உள்நாட்டு சண்டை ஜிகாத் அல்ல என்றும் அவர் கூறினார்.
Post a Comment