மாயமான மலேசிய விமானம் தொடர்பிலான புதிய நம்பிக்கைகள்..!
(Nf) காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக பிரான்ஸ் புதிய செய்மதி நிழற்படங்களை மலேசியாவிற்கு வழங்கியுள்ளது. இது காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக இந்த வாரத்தில் கிடைக்கப் பெற்ற மூன்றாவது செய்மதி நிழற்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு முன் அவுஸ்திரேலிய மற்றும் சீனா ஆகியன காணாமல் போன மலேசிய விமானத்ததின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் செய்மதி நிழற்படங்களை வெளியிட்டுள்ளன.
மாயமான விமானம் தொடர்பிலான புதிய படங்கள்; தேடுதலில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன பிரான்ஸை சேர்ந்த செயற்கைக்கோளின் புதிய படங்கள் மூலம், மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா அருகே தெற்கு இந்தியப் பெருங்கடலில், விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் உடைந்த துண்டுகள் மிதப்பது போல் தெரிவது, நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செயற்கைக்கோள் படங்களை அவுஸ்திரேலியாவுக்கு பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நான்காவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தபோதிலும், உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
எனினும், பிரான்ஸ் செயற்கைக்கோள் மூலம் கிடைத்துள்ள புதிய படங்களால் நம்பிக்கை கூடியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடைந்த துண்டுகள் போல் காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்களை அவுஸ்திரேலியாவும், சீனாவும் வெளியிட்டன.
விமானத்தின் கருப்புப் பெட்டியிலுள்ள மின்கலங்கள் 30 நாட்கள் மட்டுமே இயங்கும். அதன்பின் மின்கலங்கள் செயலிழந்து சிக்னல் கிடைக்காது. எனவே, இன்னும் 15 நாட்களுக்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் ஆழ்கடலில் அதனை தேடுவது மிகவும் கடினமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment