Header Ads



சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபை, அதாவுல்லா இணங்கினால் அவருடன் இணைவேன் - சிறாஸ்

சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபையை பெற்றுக்கொடுக்க அமைச்சர் அதாவுல்லா இணக்கம் தெரிவித்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிறாஸ் மீறாசாஹிப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் கையடக்க தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 24 ஆம் திகதி சாய்ந்தமருது ஊர் பிரமுகர்கள், எனது ஆதரவாளர்கள் சகிதம் அமைச்சர் அதாவுல்லாவுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் எமது ஊரின் பிரதான தேவைகள், மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளோம். எமது பிரதான கோரிக்கை சாய்ந்தமருது பிரதேச சபையாகும்.

இதனை பெற்றுத்தர அமைச்சர் அதாவுல்லா உத்தரவாதம் வழங்குவாராயின் அவருடன் இணைந்துகொள்ள தயாராகவிருக்கிறேன் என்றார்.

1 comment:

  1. பிரதேச வாதம் தலை தூக்கி காணப்படும் பிரதேசங்கலாக இன்று எமது முஸ்லிம் பிரதேசங்கலே காணப்படுகிறது.. இவைகள் அனைத்து அரசியல் இலாபங்கலுக்காகவே..

    ReplyDelete

Powered by Blogger.