ரியாதில் வாராந்த மார்க்க வகுப்பு
ரியாதிலுள்ள இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு, வழிகாட்டல் அமைச்சகத்தின் வெளிநாட்டவர் அழைப்பு நிர்வாகம் ரியாத் வாழ் தமிழ் பேசும் சகோதரர்களுக்காக வாராந்த மார்க்க வகுப்புக்களை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். வியாழக் கிழமை தோறும் நடைபெறவுள்ள பிக்ஹ் (மர்க்கச் சட்டங்கள்). அகீதா (நம்பிக்கை சார்ந்த விடயங்கள்) ஆகிய பாடங்களை உள்ளடக்கிய மேற்படி வகுப்புக்களில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். ''யார் மார்க்கத்தைப் படிப்பதற்காக ஒரு பாதையில் செல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் வழியை இலகுபடுத்துவான்'' என்பது நபிமொழியாகும் என்பதையும் நினைவூட்டிக் கொள்கின்றோம்.
தகவல்: அபூ ஸஃத்
Post a Comment