Header Ads



மலேசிய விமானம்: சீனாவுக்கு கிடைத்துள்ள சாட்டலைட் படங்கள்

காணாமல்போன விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற பொருளொன்றின் சாட்டலைட் படங்கள் தெற்கு இந்து சமுத்திரத்திலிருந்து சீன அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

22 மீட்டர் நீளமான பொருளொன்றே அந்தப் படங்களில் தெரிவதாக மலேசிய அமைச்சர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல்போன இந்த விமானத்தை தேடி தெற்கு இந்து சமுத்திர பரப்பில் சர்வதேச தேடல் நடவடிக்கை நடந்துவருகிறது.

வானில் நீண்டநேரம் பறந்து தேடக்கூடிய வணிக விமானங்கள் விமானத்தின் பாகங்கள் கடலில் மிதக்கின்றனவா என்று தேடி வருகின்றன.

வணிகக் கப்பல்களுடன் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் இந்து சமுத்திரத்தில் தேடலில் இறங்கியுள்ளது.

எம்எச்-370 விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பான தேடலில் நம்பந்தகுந்த முதலாவது ஆதாரம் இந்த சாட்டலைட் படங்களே என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட் மீண்டும் கூறியுள்ளார். bbc



No comments

Powered by Blogger.