யாழ்ப்பாணம் சின்ன முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு
யாழ் சின்ன முகைதீன் ஜீம்மா பள்ளிவாசல் வீதியில் எதுவித அனுமதியும் இன்றி பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டகை ஒன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியின் முழு இடத்தையும் அடைத்து தற்காலிகமாக தனியார் ஒருவரின் நிகழ்வின் தேவைக்காக இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர இவ்வீதியை வழமையாக பயன்படுத்தும் மக்களை மாற்று வீதியினூடாக பயணிக்குமாறு சம்பந்தப்பட்டவர்கள் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியில் பயணம் செய்ய முயல்பவர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்பவர்களால் அச்சுறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இச்செயற்பாட்டினால் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்வோர் மாற்று பாதையை பயன்படுத்துகின்றனர்.
நிகழ்வுடன் தொடர்புடையதாக சொல்லப்படுவோர் இதுவரை பொலிசாரிடமோ, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமோ எதுவித முன்னனுமதி பெறாமலே இவ்வீதியை மறித்து இத்தற்காலிக கொட்டகையை நிர்மாணித்துள்ளனர்.
இது குறித்து யாழ் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வாவை தொடர்பு வேளை இவ்வாறு அமைப்பது தவறு என சுட்டிக்காட்டடியதுடன் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் குறித்த வீதி தனியார் காணி அடைக்கப்படுவது போல் காட்சியளிக்கின்றது.
Post a Comment