வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
(அனா)
வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் இன்று (07.03.2014) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கழந்து கொண்டனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருந்து ஆரம்பமான பேரணி ஓட்டமாவடி பிரதான வீதியூடாக வந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கான மகஜரை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளரிடமும் கையளித்தனர்.
மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது எங்களது தொழில் சங்கங்கள் கடந்த 19.02.2014 திகதி அரச வளங்கள் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறித திசேரா மற்றும் அமைச்சின் செலாளரை சந்தித்து எங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக கதைத்த போது மார்ச் மாதம் 05ம் திகதிக்குள் எங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது ஆனால் அத் திகதி கடந்த நிலையிலும் எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை என்றும் எங்களுக்கான சம்பள நிலுவையை உரிய அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி பெற்றுத் தருமாறும் அம் மகஜரில் குறிப்படப்பபட்டுள்ளது.
மகஜரில் கலந்து கொண்ட ஊழியர்கள் இந் நாட்டு அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ எதிரான போராட்டமல்ல இது எங்களது கடதாசி ஆலையில் உள்ள பொருட்களை விற்று தற்போது கடதாசி ஆலைக்கான காணிகளையும் விற்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் ஆலையின் தவிசாளருக்கு எதிரான போராட்டமாகும் இவ் ஆலையில் இருந்து ஆலையின் தவிசாளர் வெளியேரும் வரை இப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்ததுடன் எங்களது சம்பள நிலுவை கிடைக்கா விட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடருவோம் என்றும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் கடதாசி ஆலையின் தவிசாளரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
Post a Comment