Header Ads



கொழும்பு பல்கலைகழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மாணவர்களுக்கு தடை


(Nf) கொழும்பு பல்கலைகழகத்தின் கலைபீட இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு, பல்கலைகழக வளாகம் மற்றும் விடுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு காலவரையரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களை உடனடியாக பல்கலைகழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி குமார ஹிரும்புரேகம தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக விடுதிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.

புதிய மாணவர்களை விடுதிக்கு சேர்த்துக்  கொள்வதற்கான  நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் போது இடையூறு ஏற்படுத்தியவர்களை வெளியேற்றுவதற்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.

இருப்பினும் , தமது விடுதிக்கான வருடாந்த கட்டணமான 3000 ரூபாவை குறைக்க கோரியே மாணவர்கள் விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கொழும்பு பல்கலைகழகத்தின் கலைபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த குணசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தை பல்கலைகழகத்தின் உபவேந்தர் மறுத்துள்ளதுடன் , அவ்வாறு விடுதி கட்டணத்தை குறைத்து தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுக்கவி்ல்லை எனவும் கூறினார்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு இடம்பெறும் சந்தர்பத்தில், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த எதிர்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி குமார ஹிரும்புரேகம சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.