Header Ads



சிங்கள இனவாதியை மேல் மாகாண முதலமைச்சராக்கும் கோத்தாவின் திட்டம் படுதோல்வி..?


ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவை மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கும் கோத்தாபய ராஜபக்சவின் திட்டம், தோல்வியில் முடிந்துள்ளது. 

மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஆளும்கட்சியின் முதன்மை வேட்பாளராக உதய கம்மன்பில் நிறுத்தப்பட்டிருந்தார். 

இவருக்கு கோத்தாபய ராஜபக்சவின் முழு ஆதரவு இருந்தது. 

உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரையை கோத்தாபய ராஜபக்சவே ஆரம்பித்து வைத்ததுடன், அதிக விரும்பு வாக்குகளை அவருக்கு அளித்து முதலாவதாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். 

அரசு அதிகாரியான கோத்தாபய ராஜபக்ச வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பரப்புரை செய்தது சர்ச்சையாக உருவெடுத்த போது, தனது தவறுக்காக தேர்தல் ஆணையாளரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், விருப்பு வாக்குகள் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில், உதய கம்மன்பில முதலிடத்தைப பெறமுடியவில்லை. 

ஹிருணிகா பிறேமச்சந்திரவிடம் அவர் முதலிடத்தை இழந்துள்ளார். 

கொழும்பு மாவட்டத்தில் ஹிருணிகா பிறேமச்சந்திர 139,034 விருப்பு வாக்குகளையும், உதய கம்மன்பில 115,638 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

அதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள கம்பகா மாவட்டத்தில், ஆளும்கட்சியின் வேட்பாளரான முன்னாள் முதல்வர் பிரசன்ன ரணதுங்க 249,678 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

இதனால், மாகாண அடிப்படையில், உதய கம்மன்பிலவினால் மூன்றாவது இடத்தையே பெறமுடிந்துள்ளது. 

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட, செனல் வெல்கம 115, 385 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், சில நூறு வாக்குகளால், நான்காவது இடத்துக்குத் தள்ளப்படுவதில் இருந்து உதய கம்மன்பில தப்பிக்கொண்டுள்ளார். 

விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே மேல் மாகாண முதல்வரை ஆளும்கட்சி தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் மேல் மாகாண முதல்வர் பதவி, பிரசன்ன ரணதுங்கவுக்கே வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

அதற்கடுத்து, ஹிருணிகா இருப்பதால், மூன்றாவது இடத்திலுள்ள உதய கம்மன்பிலவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை. 

இது அவரை மேல் மாகாண முதல்வராக நியமிக்கும் திட்டத்துக்கு கிடைத்த பெரும் தோல்வியாக கருப்படுகிறது.

2 comments:

  1. Almight allah always so kind with muslims.So he will save us from those people.Also he is the one king for duniyah and ahiraaah.Alhamdurillah.

    ReplyDelete

Powered by Blogger.