அமைச்சர் மேர்வின் சில்வாவை கடித்த 'நாய்'
அமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் அண்மையில் நடந்த விபத்தில் காயம் ஏற்பட்ட காலிலேயே நாயும் கடித்துள்ளது.
முற்பிறவியில் செய்த பாவம் காரணமாகவே தனது வலது காவலில் அடிக்கடி காயம் ஏற்படுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து களனியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடிக்கடி நாய் குரைக்கும். வீதிகளில் நாய்கள் பார்ப்பதுண்டு. விஷர் நாய்களும் வருவதுண்டு. கிராமத்தில் இருந்த காலத்திலும் நாய்களை பார்த்திருக்கின்றேன். நான் வளர்த்த நாய் என்னை கடிக்கும் என நான் எப்போதும் எண்ணியதில்லை.
ஆனால் எனக்கு நல்ல படிப்பினை கிடைத்துள்ளது. நான் நாய் மீது வஞ்சம் கொள்ளவில்லை. நான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் என்றார்.
Post a Comment