Header Ads



முஸ்லிம்களுக்காக ஒதுக்கிய செப்புச் சதங்களை செப்புங்கள், தேனாட்டு திருமகனே..!

(டீன் பைரூஸ்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது

காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர் திரு அரியனேந்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் N.றம்ழான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான எவ்வித ஒப்பந்தத்தையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்திருக்கவில்லை அது குறித்து உத்தியோக பூர்வமான எவ்வித பேச்சு வார்த்தைகளிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஈடுபட்டிருக்கவுமில்லை.

கிழக்கு மாகாண சபையில் இரு சிறுபான்மை இனங்களும் இணைந்து ஆட்சியமைப்பதன் மூலம் ஏற்படும் அனுகூலங்கள் சம்மந்தமாக உத்தியோகப்பற்றற்ற வகையில் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அதற்கான எந்தவிதமான இனக்கப்பாடுகளும் கானப்பட்டதாகவோ அல்லது ஒப்பந்தங்கள் செய்யப்படதாகவோ இல்லை.

இது குறித்து அறிவிலித்தனமாக மத்தியில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் எதிர்த்து அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு மாகாணத்தில் தேன்நிலவு கொண்டாட அழைப்பு விடுத்ததாக குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர் திரு பா அரியனேற்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரான நீங்கள் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் நீங்கள் காட்டிய நல்லினக்க சமிக்கை தான் என்ன? அன்று உங்களை வழி நடாத்திய புலிகளால் பலவந்தமாக எழுப்பியனுப்பப்பட்ட எமது முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்களை மீள்குடியமர அனுமதித்தீர்களா?

அல்லது பலவந்தமாக பறித்த தெடுத்த எமது விவசாயக் காணிகளில் விவசாயம் செய்யத் தான் அனுமதித்தீர்களா? உன்னிச்சையிலும் உறுகாமத்திலும் இருக்கும் நிருவாக சிக்கல்களை நிவர்திக்க நினைத்து பார்ததுண்டா? கல்லியங்காடு பள்ளி காவு கொள்ளப்பட்டதை கவனத்தில் எடுத்தீர’களா? நொச்சுமுனை மையவாடி மைதனமாக மாறுகிற கதைதான் தெரியுமா? அல்லது உங்களை வழி நடாத்திய புலிகளின் இன சுத்திகரிப்பிலும் கோரயுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க முன்வந்தீர்களா? அல்லது யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளிலும் வீட்டுத் திட்டத்திலும் எமது வீதாசாரத்தை பெற்றுக் கொள்ள அனுமதித்தீர்களா? அல்லது எமது முஸ்லிம் கிராமங்களின் எல்லை மீள்நிர்ணயம் செய்ய அனுமதித்தீர்களா? காத்தான்குடி வடக்கு எல்லையின் தௌவான வரத்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த நியாயமாக சிந்தித்தீர்களா? அல்லது உயர் அரச பதவிகளில் முஸ்லிம் இனத்தவர்களை நியமிக்க அனுமதித்தீர்களா?

கேவலம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கு முஸ்லிம் ஒருவர் முன்மொழியப்பட்டதும் உங்கள் முகமான இனவாதத்தை அனல் கக்கினீர்களே காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்ற பெயரை தான் தங்களால் அங்கிகரிக்க முடிந்ததா? காத்தான்குடி வைத்தியசாலையில் போதனா வைத்தியசாலையின் போதனைப் பிரிவு ஒன்றினை தாபிக்க முனைந்த போது தாம்தூம் என கதரிப் பதரினீர்களே?

எருமைத்தீவில் காணியை முஸ்லிம்கள் வாங்க முற்பட்ட போது முன்நின்று மூச்சிரைக்க தன்னிலை விளக்கம் தானலித’தீர் காத்தான்குடி பிரதேச எல்லையாக போகப்போகின்றது என பிதட்டினீர்களே ஐயா, கர்பலா தனியார் காணிகளில் பிரேதங்களை பிரதேச சபையால் புதைத்த போது உங்களது இனவாத முகத்ததைக்காட்டி மாவட்ட அபிவிருத்தி சபையில் அங்கலாளத்தீர்களே இத்தனை ரணங்களைச் சுமந்து இன்னும் சொல்லத்தவறிய சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து கொண்டு

தாங்கள் பிரதிநிதிதுவப்படுத்தும் மட்டு மாவட்டத்தில் முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருக்கும் போதும் ஏறாவூர் நகர சபைளால் கழிவுகளைக் கொட்ட காணிகளைக் கேட்டபோது இல்லை என்று மறுத்தஅதே சபையில் மாநகர கிரிஸதப சபைக்கு (Nசுஊ) சேமக்காலைக்கு காணி ஒதுக்கி காரியமாற்றி கழிப்புவகை கண்டீர்களே அப்போழுது எல்லாம் முஸ்லிம்களை அரவனைக்க தோன்றாத தங்களுக்கு முஸ்லிம் சமூகம் சார்ந்து ஏற்றுக் கொள்ளாத நீங்கள் இன்று கிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சியை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனோநிலையில் ஆட்சிக்கட்டிலில் இணைந்து பிணைந்து கிழகில் கீர்த்தி கொள்வோம் என வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

ஆடு பகை குடடி உறவு என்பதற்கு அப்பால் ஆட்டினமே பகை இடையர்களே மடம் புடுங்குவோம் வாரீர் என்று அரைகூவல் விடுப்புத போன்று தோன்றுகிறது அன்று ஆயுதங்களை கொண்டு அடக்கி ஆண்ட நீங்கள் இன்று அரச நிருவாகத்தினை கொண்டு அடக்கியாள எத்தனிக்கின்றீர்கள் 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன் அது விடயமாக கட்சித் தலைமையை எதிர்த்து ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தவன் நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்காமல் தவிர்ந்து கொண்டது முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமையின் தீர்க்கதரிசனமானதொரு முடிவு என்பதை நான் காலம் கடந்து அறிய முடிந்தது.

டயஸ்போராக்களுக்கும் புலிகளின் பிணாமிகளின் நிகழ்சி நிரல்களுக்கு ஏற்ப்ப அவ்வப்போது அரசியல் அறிக்கைகளை விட்டு இருசமூகம் ஒரு தலைமை என்பதை கட்டியெழுப்ப மட்டு மாவட்டத்தில் தங்களைப்போன்றோர்கள் அடதள மக்களிடமிருந்து கட்டியெழுப்பிய இன உறிவில் உச்சத்திலே தான் இவ்வாரான உச்சரிப்புக்களை விடுக்க வேண்டுமே தவிர சமூகங்களை நச்சரிப்பதே தொழிலாகக் கொண்டு இவ்வாரான பத்திகைகளுக்கு தீனி போடுகின்ற அரசியலை நிறுத்திக் கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிஸ் என்பதற்கு அப்பால் முஸ்லிமகளில் ஒருவன் என்ற வகையில் கோரிக்ககை விடுக்கிள்றேன்

அத்துடன் தங்களது அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களையும் தழிமர்களையும் இணைப்பதற்கு தாங்கள் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைதான் என்ன? என்பதை மட்டக்களப்பு முஸ்லிம்கள் சார்பில் எதிர்பார்க்கின்றேன் அத்தடன் மாவட்ட முஸ்லிம் பிரதி நிதிகள் தழிழ் பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதை அவதானிக்கின்ற அதே வேளை (அதனை தங்களுக்கு ஜீரனிக்க முடியாது என்பது வேறு கதை)

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முஸ்லிம்களுக்காக ஒதுக்கிய செப்புச் சதங்களை செப்புங்கள் தேனாட்டு திருமகனே.

இருசமூகங்களுக்கு இடையில் பிரிவினை வாதத்தினை ஊட்டி பிளவுகளுக்கு மத்தியில் அரியனைச் சுகத்தை அனுவிக்க ஆசைப்படும் அரியனேந்திரன் ஐயா போன்றவர்கள் பிளவுகளை மூடி தவறுகளைத் திருத்தி வரலாற்றை சரி செய்வீரகளாயின் முஸ்லிம் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்த இறந்த காலத்திலருந்து எதிர் காலம் முஸ்லிம்களுக்கான ஆட்சியை நீங்களே அமையுங்கள் என்று உளச்சுத்தியுடன் கூறும் அதற்கு அறிக்கைகள் அவசியம்pல்லை

ஆக்கவூர்வமான காரியங்களை எதிர் பாரக்கின்றோன் தங்களை இன ஒற்றுமைக்கு அச்சாரம் போடும் வித்தாகத்தான் நினைத்தேன் பாசிசத்தின் இத்துப்போன ஆடைகளை புதிதாக தைத்துப் போடுகின்ற புதினத்தை புரிந்து புலிச்சாயத்தில் புல்லரிப்பிர்களென்று எதிர் பார்க்கவேயில்லை

No comments

Powered by Blogger.