நிந்தவூரில் சர்வமத தலைவர்கள் சந்திப்பு
(சுலைமான் றாபி)
மதங்களுக்கு இடையில் நட்புறவினை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த சமூகங்களை உருவாக்கும் நோக்கில் சர்வ மத சந்திப்பு நிகழ்வு இன்று (29.03.2014) காலை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி எச். பி. பீரிஸ், கேர்ணல் ஸ்ரீசாந்த, கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி பிரியந்த கமகே, அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்புபிரிவின் தளபதி லெப்டினன் கேர்ணல் எச். வீரசிங்க, மேஜர் நவரட்ன மற்றும் மேஜர் பிரசாத் ஆகியோர்களும் அவர்களுடன் பள்ளிவாசல்கள், விகாரைகள், கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவர்களும் சமூகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்த சந்திப்பின் இறுதியில் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறக்கப்பட்ட நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலையும் படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Post a Comment