Header Ads



கல்முனைப் கடல்சார் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை


(எம்.எம்.ஏ. ஸமட்)

கல்முனைப் பிரதேச கடல்சார் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு மட்டுப்படுத்தப்பட்ட அல்-புஸ்ரா ஆழ்கடல் மீன்பிடி, கடல்சார் உற்பத்தி, சந்தைப்படுத்தல், இயந்திரப் படகு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது, இது குறித்து இச்சங்கம் குறிப்பிட்டதாவது, 

கடல்சார் தொழிலை நம்பி பல நூற்றுக்காக்கான குடும்பங்கள் கல்முனைக் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

கல்முனைப் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்கள், இஞ்சின்; தோணி மீன்பிடிப்பாளர்கள், ஸ்ரீம் படகு மீனவத் தொழிலாhள்கள் மற்றும் ஆழ்கடல் மீனவத் தொழிலாளர்கள் என நூறுக்கணக்கான கடல்சார் தொழிலாளாகள் கடந்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

கல்முனையில் உள்ள 644 ஆழ்கடல் இயந்திரப் படகுகளில் ஓராயிரம் பேரும் 300 ஸ்ரீம் படகுகளில் 600 பேரும்  20 கரைவலை தோணியில் 750 பேரும் 20 இஞ்சின்; தோணியில் 60 பேருமாக நேரடியாக மீன்பிடித்தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மறைமுகாக ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களும் கடல் சார் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், இவர்கள் பல்வேறு பிரச்சினைகளi எதிர்நோக்கி வருவதாக சங்கம் குறிப்பிடுகிறது..

பிடித்து வரப்படும் மீன்களை குளிருட்டுவதற்கான குளிரூட்டல் நிலையம் இல்லாமை, எரிபொருள் மானியம் கிடைக்கப்பெறாமை, உயிர்காப்பு அங்கி வழங்கப்படாமை, கடற்கரைப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை கல்முனைப் பிரதே கடலசார் மீனவ சமூகம் எதிர்நோக்கி வருகிறது

அத்துடன், இப்பிரதேச கடல்சார் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சங்கங்களால' உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியுள்ள போதிலும் அவர்கள் மேலிடங்களுக்கு எமது பிரச்சினைகள் குறித்து அறிவிக்காமல்; இழுத்தடிப்புச் செய்து வருவதாக மேற்படி சங்க உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

நாட்டின் ஏனைய பிரதேச கடல்சார் மீனவத் தொழிலார்கள் பெற்றுக் கொள்ளும் வரப்பிரசாதங்கள் கல்முனைப் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் விரைவில் தீர்த்து வைக்கப்பட வேண்டுமெனவும் மட்டுப்படுத்தப்பட்ட அல்-புஸ்ரா ஆழ்கடல் மீன்பிடி, கடல்சார் உற்பத்தி, சந்தைப்படுத்தல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது,

No comments

Powered by Blogger.