மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருக்காவிட்டால், முஸ்லிம் தலைவர்களின் நிலை..?
நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு சில முயற்சித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 30 ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்ற இலங்கையில் தற்பொது சமாதானத்தின் நன்மைகள் கிடைக்கப் பெற்று வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
சில சக்திகள் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.எனினு; அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலதா மாளிகை மீதான தாக்குதல், அரந்தலாவை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் போன்ற பல தாக்குதுல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகவும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டியிருக்காவிட்டால் முஸ்லிம் தலைவர்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். gtn
30 வருடமாக பாவாடை உடுத்டுக்கொண்டிருந்தவர்களெல்லாம், ஆ,, ஊ,,, என்றால் எடுத்ததுக்கெல்லாம் களத்தில் நின்று போர்செய்தவனைப்போல 30 வருடம், 30 வருடம் என்று சொல்லி சொல்லியே பொழப்பு நடத்துறானுங்க. சரத் பொன்சேகா சொன்னதை இவங்க கேட்கல்லியோ.. கண்ட நாயெல்லாம் போரின் வெற்றியைப் பற்றி பேச அருகதை அற்றவர்கள் எம்மைத்தவிர என்று.
ReplyDelete