Header Ads



எங்களின் இதயம் நொறுங்கி போயுள்ளது - மலேசியன் ஏர்லைன்ஸ்


மலேசிய விமான விபத்தில் சிக்கி அனைவரும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வோம் என மலேசிய அரசு மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் இன்று நிருபர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர். ஆனால் மலேசிய அரசும், மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகமும் கொலைகாரர்கள் என சீன நாட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் கூட்டாக தெரிவித்ததாவது; மலேசியாவில் உள்ள அனைவரும் இந்த கறுப்பு நாளில், இறந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். இந்த நாள் அளவிட முடியாத அளவிற்கு உணர்ச்சியான நாள் ஆகும். விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கும். விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கப்படும்.

900 பேருக்கு தேவையான உதவி: இறந்த குடும்பத்தினருக்கு உதவி; பலியான குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.மலேசியா அரசு தரப்பில் கூறுகையில், 'நாங்கள் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். விபத்தில் பலியான குடும்பத்தினர் 900 பேருக்கு தேவையான உதவிகள் செய்வோம். அவர்கள் சோகத்தில் இருந்து தேற, தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை மலேசியாவிற்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவலின்படி, விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். விமானம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து குறித்து இன்னும் 17 நாட்கள் கழித்து இறுதி முடிவுக்கு வரமுடியும். இந்த விமானம் தென் இந்திய கடல் பகுதியில் விமானம் விழுந்துள்ளது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ் சி.இ.ஓ., அகம்மது ஷகாரி யாக்யா கூறுகையில், இந்த விபத்து காரணமாக எங்களின் இதயம் நொறுங்கி போய் உள்ளது. தொடர்ந்து பிரார்த்தனையும். உள்ளார்ந்த இரங்கலையும் பாதிக்கப்பட்டோருக்கு தெரிவித்து கொள்கிறோம்.

இதற்கிடையில், விபத்தில் பலியான சீனர்கள் குடும்பத்தினர் மலேசிய அரசை கடும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளனர். மலேசிய அரசும், விமான துறையினரும் கொலைகாரர்கள் என விமர்சித்துள்ளனர்.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. இதில் 237 பயணிகள் இருந்தனர். சீன நாட்டை சேர்ந்தவர்கள் 135 பேர் உயிரிழந்தனர்.

*மலேசிய அரசு எந்த அடிப்படையில் இது விபத்து என்று சொல்கிறது ? இதற்கான சாட்டிலைட் ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை எங்களிடம் தர வேண்டும் என்றும் சீன அரசு கேட்டுள்ளது. 

* விமானத்தின் கறுப்பு பெட்டி எங்கே தேடுதல் வேட்டை தொடர்கிறது

* மோசமான வானிலை தேடுதல் பணிக்கு இடையூறு.

No comments

Powered by Blogger.