இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளின் தந்தை நானே - மகிந்த ராஜபக்ச
இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளின் தந்தை தானே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது மூன்று பிள்ளைகளுக்கு மட்டும் தான் தந்தை அல்ல எனவும் நாட்டில் சகல பிள்ளைகளின் தந்தையும் தானே எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெற்றோரிடம் தமது பிள்ளைகள் தொடர்பாக இருக்கும் சில தவறான எண்ணங்கள் காரணமாக பல பிள்ளைகள் சமூகத்தில் இருந்து பிரிந்து தனித் தனியாக வாழும் நிலைமை உருவாகியுள்ளது.
பெற்றோர், இளைஞர்களான தமது பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அந்த பிள்ளைகள் தாய் நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாட்டிலும் நல்ல பெயர் எடுப்பார்கள் என்றார்.
ORUTHARUKU ELUMBI NITKAVE VAKKILLAYAM, ATHUKULLA NAADU MULUVATHUM ............... THEVAI PADUTHAM.
ReplyDelete