Header Ads



தெஹி­வளை ஷாபி பள்­ளி­வா­சல் நிர்வாகம், இன்று நீதிமன்றத்தில் நியாயங்களை முன்வைக்கிறது

(Vi) கொஹு­வளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தெஹி­வளை, கட­வத்தை வீதி தாருஸ் ஷாபி பள்­ளி­வா­சலின் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்­புக்கள் உள்­ளிட்ட குர்ஆன் வகுப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் தடை விதித்து நுகே­கொடை நீதவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

நுகே­கொடை நீதவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் 99762ஆம் இலக்க வழக்கு விசா­ர­ணை­களின் முறைப்­பாட்­டா­ளர்கள் மற்றும் சாட்சி பதி­வு­களை தொடர்ந்து நீதி­மன்றம் வௌியிட்­டுள்ள அறி­வித்­த­லி­லேயே இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் 99ஆவது அத்­தி­யா­யத்­திற்கு அமை­வாக அறி­வித்தல் ஒன்­றினை வௌியிட்டு நுகே­கொடை நீதவான் நீதி­மன்ற பதில் நீதவான் ஜி.ஏ.ஆர். ஆட்­டி­கல இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

இதன்­படி நேற்று முன்­தினம் மாலை முதல் தாருஸ் ஷாபி பள்­ளி­வா­சலில் தொழுகை உள்­ளிட்ட எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் இடம்­பெ­ற­வில்லை என்­ப­துடன் மூன்று மாடிகள் கொண்ட குறித்த பள்­ளி­வா­சலில் இரு பொலிஸார் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

அமு­வத்­தகே பிரே­ம­சிறி, தேத்­துவ ஜய­துங்க பரி­யந்த லால் உள்­ளிட்ட மூன்று முறைப்­பாட்­டா­ளர்­களின் முறைப்­பாட்­டிற்கு அமைய கொஹு­வல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தாக்கல் செய்­தி­ருந்த மனு மீதான விசா­ர­ணை­யி­லேயே இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டப்­டுள்­ளது.

இந்த வழக்கின் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள தெஹி­வளை, கட­வத்தை வீதி தாருஸ்­ஷாபி பள்­ளி­வா­சலின் நிர்­வா­கி­க­ளுக்கே அறி­வித்தல் அனுப்­பி­யுள்ள நீதி­மன்றம் பள்­ளி­வா­சலின் செயற்­பா­டு­க­ளுக்கும் நிபந்­த­னை­யுடன் கூடிய தடை­யினை விதித்­துள்­ளது.

1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் 98 (1) அத்­தி­யா­யத்தின் பிர­காரம்இ புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்சில் அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொள்ளும் வரை இந்த பள்­ளி­வாசல் மீதான நிபந்­த­னை­யுடன் கூடிய தடை­யா­னது நீடிக்கும் என நீதி­மன்ற பதி­வாளர் ஊடாக அனுப்­பப்­பட்­டுள்ள குறித்த அறி­வித்­தலில் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் 98 (1) அத்­தி­யா­யத்தின் பிர­காரம் நாளைய தினத்­திற்குள் நுகே­கொட நீதவான் நீதி­மன்றின் முன்­னி­லையில் ஆஜ­ராகி குறித்த தடை­யினை விலக்­கிக்­கொள்ள முடியும் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள நீதி­மன்றம் இல்­லையேல் வௌியி­டப்­பட்­டுள்ள அறி­வித்தல் பிர­காரம் செயற்­பட முடியும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில் பிர­தி­வா­தி­யான பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற குறித்த தடை அறி­வித்­த­லுக்கு எதி­ராக இன்று நகர்வு மனு ஒன்­றினை முன்­வைத்து நீதி­மன்­றுக்கு பதி­ல­ளிக்க பள்­ளி­வாசல் நிர்­வாகம் தயா­ராகி வரு­கி­றது.

குறித்த பள்­ளி­வாசல் தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கார அமைச்சின் அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என நீதி­மன்றம் நிபந்­தனை விதித்­துள்ள நிலையில் தெஹி­வளை, கட­வத்தை வீதி தாருஸ் ஷாபி பள்­ளி­வா­ச­லா­னது வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தொிவிக்­கி­றது.

வக்பு சட்­டத்தின் கீழ் R/2093/C199 என்ற இலக்­கத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்ள இப்­பள்­ளி­வாசல் தொடர்பில் இன்­றைய தினம் நீதி­மன்றில் தமது பக்க நியா­யங்­களை முன்­வைக்க உள்­ள­தாக பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் எம். எஸ் பிஸ்ருள் ஹாபி குறிப்பிட்டார்.

முன்­ன­தாக குறித்த பள்­ளி­வா­ச­லா­னது இனந்­தொி­யாத நபர்­களின் கல் வீச்சுத்தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி இருந்­த­துடன் அந்த பள்­ளி­வா­சலை குறித்த இடத்­தி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு சில தரப்­பினர் தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்து வரு­கின்­ற­மையும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. முஸ்லீம்களுக்கு எதிராக அனைத்து விடயங்களிலும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் எமது முஸ்லீம் தலைவர்கள் மௌனம் சாதிப்பது எதிரிகளுக்கு மறைமுக ஆதரவு என்ற கருத்தில் எடுத்துக்கொள்ளலாமா...?

    மாதம்பேயில் பள்ளிவாசல் முஸ்லீம்களால் எரிக்கப்பட்டபோது 'பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்' என்ற செய்தியை படித்தோம். ஆனால் இந்த தெஹிவலை பள்ளிவாசல் மூடிய விவகாரத்தில் அனைவரும் மௌனம் சாதிப்பது எதை வெளிப்படுத்துகிறதோ...??

    ReplyDelete
  2. மாதம்பையில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டதா ??
    சகோ.Akram என்ன பேசுகிறீர்கள் ??? மீடியாக்களில் சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் உளற வேண்டாம் ...

    ReplyDelete
  3. மாதம்பேயில் பள்ளிவாசல் 'எறிக்கப்பட்டது' என்று தானே எழுதினேன்........ 'உடைக்கப்பட்டது' நீங்கள் வாசித்தால் அதற்கு நான் பொருப்பாக முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.