உதுமாலெப்பையின் கவனத்திற்கு..!
(யு.எம்.இஸ்ஹாக்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை மாகநகர பிரதேசங்களில் பல வீதிகள் புனரைமப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும் கல்முனை ஸாகிரா கல்லூரி வீதி, முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் வீதி கடற்கரைப் பள்ளிவாசல் வீதி மற்றும் கடற்கரை வீதி என்பன எதிர்வரும் 26ஆம் திகதி உத்தியோபூர்வாமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் அழைப்பின் பேரில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவினால் மக்களிடம் கைளிக்கப்படவுள்ளது.
மக்களிடம் வீதி கையளிக்கப்படவுள்ள நிலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கல்முனை கடற் கரைப்பள்ளி வீதியின் நிர்மாணப்பணி முற்று முழுதாக நிறைவு செய்யப்படவில்லை என அந்த வீதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். புனரமைப்பு செய்யப்பட்ட வீதிக்கு இரு மருங்கிலும் வடிகான் அமைக்கப்பட்டு மூடிகள் போடப்பட்டுள்ளன எனினும் வடிகான் முழுவதும் கல்,மண் நிறைந்து நீர் தேங்கியுள்ளது. இதனால் டெங்கு அபாயம் அந்த வீதியில் வசிக்கும் மக்களுக்கு உள்ளது.
மக்களுக்கு வீதி கையளிப்பதானால் இருபக்க வடிகானும் துப்பரவு செய்த பின்னரே கையளிக்கப்பட வேண்டும் என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தை கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சர் உதுமாலெப்பை கவனத்தில் கொண்டு வடிகானை துப்பரவு செய்யவேண்டும் என அம்மக்களால் கூறப்படுகின்றது..
Post a Comment