ரவூப் ஹக்கீம் பொய் கூறிய போதுதான், எனக்கு கோபம் வந்தது - ஜனாதிபதி மஹிந்தவின் விளக்கம்
(நஜீப் பின் கபூர்)
கடந்த வாரம் ஹக்கீமுடன் நடந்த முறுகல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஒரு விளக்கத்ததை அளித்திருக்கின்றார். அந்த விளக்கம் தொடர்பான தகவல்களை இப்போது பார்ப்போம்.
சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு மிகவும் வேண்டிய முஸ்லிம் அன்பர் அல்கம் என்பவரின் மகளுக்கு திருமணம் நடந்தது. இந்தத் திருமண வைபத்திற்கு ஜனாதிபதிக்கும் அழைப்புக் கிடைத்திருந்தது. ஜனாதிபதி அங்கு சென்றிருந்த போது அமைச்சர் ராஜித்த சேனாரத்னாவும் அங்கு வருவதை அவதானித்த ஜனாதிபதி அவரைத் தன்னுடன் வந்து அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது ஜனாதிபதி நீங்கள் சென்ற முறை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை தானே என்று ராஜிதவிடம் கேட்க அவரும் வருகை தரமுடியாமல் போன காரணத்ததை ஜனாதிபதியிடத்தில் கூற, அந்தக் கூட்டத்தில் ஹக்கீமுடன் எனக்குப் பெரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டடு விட்டது. உங்களுக்குக் கேள்விப்பட்டிருக்கும்தானே என்று கேட்க நீங்கள் ஹக்கீமுடன் அவ்வளவு தூரம் கடுமையாக நடந்துகொள்ள அங்கு என்ன நடந்தது என்று ராஜித்த ஜனாதிபதியிடம் திருப்பிக் கேட்க அவர் சொன்ன விடயங்களைக் கேட்ட போது எனக்கு கடுமையான கோபம் வந்து விட்டது
அப்படி என்னதான் ஹக்கீம் கூறினார்...!என்று மீண்டும் ராஜித்த திருப்பிக் கேட்க, இல்லை ஹக்கீம் ஒரு கடுமையான கடிதத்தை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். நாங்கள் பள்ளிகளை உடைக்கின்றோம், முஸ்லிம்களுக்குத் தொந்தரவு செய்கின்றோம் என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இது பற்றி நான் ஹக்கீமைக் கேட்டபோது அப்படி எதுவுமே நான் செய்யவில்லை என்று அவர் என்னிடத்தில் பொய் கூறிபோதுதான் எனக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது என்று அவர் அன்று அமைச்சரவையில் நடந்த கதையை ரஜித்தவிடம் கூறி இருக்கின்றார்.
நீதி, நேர்மை அற்ற, அரசியல் நாணயம் அற்ற ஒரு துவேச மனம் கொண்ட ஒரு ஜனாதிபதியிடம் இதை தவிர வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது.
ReplyDeleteதலைவர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஒரு தனி மனிதன் அல்ல அவர் ஒரு கட்சியினதும் ஒரு முஸ்லிம் இனத்தினதும் மதிக்கப்படும் தலைவர்களுள் ஒருவர்.. அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அப்படி சொல்லக் குடியவரும் அல்ல என்பதை அரசியல் நாகரிகம் அற்ற ஜனாதிபதியின் கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்.
Dear President:
ReplyDeleteEventhough Mr. Hakim did say that, it is true though. Many mosques have been damaged. What have you done being a president? Why do you have to be mad?Beside the point, Mr. Hakim is not a good leader as he was saying Hasan Ali handed over the doc!!!- What a leader???Solve the problems, sir. Please.