எதிர்வரும் காலம் ஆபத்தானது, பேசா மடந்தைகளால் எமக்கு பலனில்லை - அஸாத் சாலி
விக்கிரமபாகு,மனோ கணேஷன்,முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இல்லாத மேல் மாகாண சபையால் முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகான சபை உறுப்பினருமான அஸாத் சாலி அறிக்கை
இம்முறை நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்குகளை மிகவும் நுணுக்கமாகவும், விவேகமாகவும்,வழமைக்கு மாறுபட்ட விதத்திலும் பயன்படுத்த வேண்டும். வழமையாக குடும்பத்தோடு சென்று ஒரே கட்சியைச் சேர்ந்த யாராவது வேற்பாளர்களுக்கு வாக்களிப்பதுதான் முஸ்லிம்களின் பழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால் இம்முறை அதை அவர்கள் மாற்ற வேண்டும். ஒரே கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பதால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் இதுவரை முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்?; சிறுபான்மை சமூகத்துக்காகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்காகவும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் தேடிப் பார்க்க வேண்டும். அவ்வாறு தேடிப்பார்த்து அந்த குரல்கள் மீண்டும் மாகாண சபையில் எங்களுக்காக ஒலிக்கும் வண்ணம் முஸ்லிம்கள் தமது வாக்குகளை பிரயோசனம் மிக்கதாகப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் வௌ;வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். அதைப்பற்றி எமக்கு அக்கறை தேவையில்லை. அவர்கள் கட்சி பார்த்து கொண்டு எமக்காக பேசவில்லை. நாம் பாதிக்கப்பட்ட போது அவர்களின் குரல்கள் எமக்காக ஒலித்துள்ளன. அதற்கான நன்றிக் கடனைச் செலுத்த நாம் இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நாம் நன்றி கெட்டவர்களாகி விடுவோம்.
இம்முறை கொழும்பு மாவட்டத்தில் அவ்வாறான மூன்று நபர்களை நாம் அடையாளம் காணக் கூடியதாக உள்ளது. ஒருவர் நண்பர் விக்கிரமபாகு கருணாரத்ன. தமிழ் முஸ்லிம் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஓங்கி ஒலிக்கும் ஒரு குரல் அவருடையதாக இருந்து வந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம். அவர் நவ சமசமாஜக் கட்சியில் மேசை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.அவரது இலக்கம்39
மற்றவர் நண்பர் மணோ கணசன். அவர் தனது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றார். ஏணி சின்னத்தில் இவரின் இலக்கம் 1. இவரை பற்றிய அறிமுகம் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு தேவையில்லை. அந்தளவு பிரபலமானவர். துணிச்சலான ஒரு கட்சித் தலைவர். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க அவர் என்றுமே பின் வாங்கியதில்லை.கொழும்பு மாநகர சிறுபான்மை மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்.
மற்றவர் முஸ்லிம்களுக்கு மிகவும் அறிமுகமான சகோதரர் முஜிபுர் ரஹ்மான். இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாவட்டத்தை ஏற்கனவே பிரதிநிதித்துவம் செய்துள்ளவர். முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது தலைநகரில் இருந்து ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலாக அவரின் குரல் அமைந்துள்ளதை நாம் நன்கு அவதானித்துள்ளோம்.இவர் யானை சின்னத்தில் இலக்கம் 30 இல் போட்டியிடுகின்றார்.
எமது தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக எவரும் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவில்லை. ஆனால் எமது கட்சியைப் பொறுத்த மட்டில் மேற் சொன்ன மூவரும் இல்லாத மேல் மாகாண சபையால் மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே நாம் கருதுகின்றோம்.
பேசா மடந்தைகளையும் அரசுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு தனது வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருப்பவர்களையும், முஸ்லிம் இனத்தை இந்த நாட்டில் இருந்து முற்றாக துரத்த வேண்டும் என்று கங்கனம் கட்டி செயற்படும் உதய கம்மன்பிலவுக்கு பின்னால் கைகோர்த்து நிற்பவர்களையும் மாகாண சபைக்கு அனுப்புவதால் மக்களுக்கு என்ன பலன்? முஸ்லிம்களுக்கு கொழும்பில் கூட இன்னல்கள் ஏற்பட்டபோது இவர்கள் எங்கே இருந்தார்கள். தந்தையின் கோர்ட் பைக்குள் இருந்தார்களா? அல்லது தாயின் முந்தானைக்குள் ஒலிந்திருந்தார்களா? இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீது 1915ல் நடத்தப்பட்ட இனரீதியான தாக்குதலை நினைவு கூறும் வகையில் 2015ல் முஸ்லிம்களுக்கு எதிhக அதே போன்ற ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கானும் கூட்டத்தின் சட்ட ஆலோசகரின் பின்னால் இவர் தஞ்சம் புகுந்துள்ளமை வேதனையானதாகும்.இப்படிப்பட்ட கோழைகளுக்கும் வாய் பேசா மௌனிகளுக்கும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் பாடம் புகட்ட தவறக் கூடாது.
நாம் மேற் சொன்ன மூவரும் மூன்று வௌ;வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்வதால் தான் இம்முறை சற்று வித்தியாசமாக வாக்களிக்குமாறு முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறோம். ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தமக்குள் பேசி இந்த கட்சிகளைத் தெரிவு செய்து அதன் அடிப்படையில் தமது குடும்ப வாக்குகள் இந்த மூவரையும் சென்றடையும் வகையில் பிரிந்து தமது வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
குடும்பத் தலைவன் யானைக்கு வாக்களித்தால் குடும்பத் தலைவி மேசைக்கும், மகள் அல்லது மகன் ஏணிக்கும் வாக்களிக்கலாம். அதுபோலவே உறவினர்களையும் வாக்களிக்க தூண்டினால், முஸ்லிம்களின் வாக்கு ஒட்டுமொத்;தமாக ஒரே கட்சியை சென்றடையாமல் இவர்கள் மூவருக்கும் பிரிந்து சென்று நிச்சயம் இந்த மூவரையும் நாம் மாகாண சபைக்கு அனுப்பலாம். அதன் மூலம் மாகாண சபையில் எமது பிரதிநிதித்துவத்தை இன மத பேதமின்றி ஓங்கி ஒலிக்கச் செய்யலாம். இனவாதிகளுக்கு இது சாவு மணியாக இருக்கும். இதை விடுத்து அரச தரப்புக்கோ அல்லது அரச தரப்பின் அமைச்சர்களுடைய ஏனைய கடசிகளுக்கோ நீங்கள் வாக்களித்தால் குறிப்பாக முஸ்லிம்கள் வாக்களித்தால் அது இந்த நாட்டில் எஞ்சியிருக்கின்ற பள்ளிவாசல்களை உடைப்பதற்கு நீங்களே கற்களை வாரி வழங்குவதற்கு சமமாகும். என்னைப் பொறுத்தமட்டில் அரசுக்கும் அரச சார்பு கட்சிகளுக்கும் முஸ்லிம்கள் வாக்களிப்பது ஹராமான ஒரு காரியத்தை செய்வதற்கு சமமானது என்றே கருதுகின்றேன்.
எதிர்வரும் காலம் ஆபத்தானது. எனவே பேசா மடந்தைகளால் எமக்கு பலனில்லை. எமக்காக குரல் கொடுக்கக் கூடிய துணிச்சல் மிக்க விக்கிரமபாகு, மனோ கணேஷன், முஜிபுர்ரஹ்மான் ஆகிய மூவரையும் மாகாண சபைக்கு அனுப்ப முஸ்லிம்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள் அரசை பாதிக்குமா இல்லையா என்பது ஒருபறம் இருக்கட்டும். ஆனால் முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து தமது கடமையை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும். இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகவும்,வித்தியாசமாகவும் நாம் பயன்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் கைசேதப்பட வேண்டியிருக்கும்.
அசாத் சலிஹ் ஒரு விடயத்தில் தெழிவாக உள்ளார். அதாவது, அவாரால் பரிந்துரைக்கப்படுகின்ற மூவருமே மேல் மாகான சபைக்கு எடுபடக்கூடாது என்பதுதான் அவரின் அடிமனது ஆதங்கம். அவ்வாறு தோற்றால்தான் இவர் கீறோ மாதிரி நடிக்கலாம்.
ReplyDeleteகொழும்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரு கட்சிக்கு வாக்களித்தால் 3 முஸ்லிம் ஒருப்பினர்களை தெரிவுசெய்து பலத்தை காட்ட முயற்சிக்காமல், வாக்குகளை சிதறடிக்கும் முயற்சிதான் இந்த அசாதின் கனவும் என்பதை இன்றே மக்கள் புரிந்து நடக்க வேண்டும்.
அசாத் சொல்வது போல், அரசு மோசம் என்றால், இவர் முதலில் செய்யவேண்டியது அரசை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு முஸ்லிம் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் அரசின் வெற்றியை மேலும் ஸ்திரப்படுத்தும் முயற்சிதான் இவரின் வங்குரோத்து முயற்சி. இவருக்கு அரசின் ஆசிர்வாதமும் உண்டு என்பதும் மக்களுக்கு இன்னும் புரியாது.
DEAR SLAHY...ரவுப் ஹக்கீம் அவர்கள் அரசை மாற்றியமைக்க முடியும் என்கிறாரே.... இதற்கு ஆசாத் சாலி அவர்களின் முயற்சி வேண்டாம்.......??? எல்லா வீராப்பு பேச்சுக்களும் தேர்தல் முடிந்த பின்னர் பார்க்கலாம்.....!!!
ReplyDelete