மௌத்தாகும் வரைக்கும், இனி முஸ்லிம் காங்கிரசுடன்தான் இணைந்திருப்பேன் - எஸ்.நிஜாமுதீன்
(யு.எம்.இஸ்ஹாக்)
அரசியல் ரீதியாக அனைத்து பதவிகளையும் அனுபவித்து விட்டேன் நான் மாகான சபை உறுப்பினராகுவதற்கோ அல்லது பாராளுமன்றத்துக்கு செல்வதற்கோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசோடு மீண்டும் இணையவில்லை. கட்சியை பாதுகாக்கவே திரும்பி இருக்கின்றேன் என அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் மீண்டும் இணைந்து கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார் .
நிஜாமுதீன் மீண்டும் கட்சியில் இணைந்தமை பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு 08.03.2014 இரவு 9.00 மணிக்கு சாய்ந்தமருது சி பிரீஸ் மண்டபத்தில் நடை பெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நான் பிரதி அமைச்சராக 4 வருடங்கள் இருந்து செய்த அபிவிருத்தி பணிகள் 40 வருட அபிவிருத்திக்கு ஒப்பானதாகும். ஆனால் நான் செய்தவை ஒன்று கூட மக்களுக்கு புரியவில்லை நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இருந்து அந்த அபிவிருத்திகளை செய்திருந்தால் அத்தனையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.
நான் எந்த ஆசையும் வைத்து முஸ்லிம் காங்கிரசில் இணையவில்லை நான் எனது மன தாங்கல் காரணமாக ஒதுங்கி இருந்தேனே தவிர கட்சியை விட்டு விலகவில்லை. அதனால்தான் இன்றும் எனது கட்சியுடன் இணைந்துள்ளேன். இனி மௌத்தாகும் வரைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன்தான் இணைந்திருப்பேன் .
இந்த காலகட்டத்தில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது கட்டாய தேவையாக உள்ளது. அதற்காக என்னை அர்ப்பணிக்க உள்ளேன் . நான் கட்சியை விட்டு ஒதுங்கி இருந்த காலத்தில் எந்தவொரு சந்தர்பத்திலும் கட்சிக்கு மாறு செய்யவில்லை . எனினும் ரிசாத் பதியுதீனின் கட்சி எனக்கு கழுத்தறுப்பு செய்தது அதனால்தான் அக்கட்சியை விட்டு வெளியேறினேன். நான் மீண்டும் கட்சியுடன் இணைய தலைவர் ரவூப் ஹக்கீமை நெருங்கிய போது சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார் என நிஜாமுதீன் கூறினார்.
Welcome back brother and wish all the best
ReplyDeleteஉங்கள் சாவை அறிந்துவிட்டீர்களோ?இல்லை,சொன்னதற்காக விரைவில் சாவீர்களோ?
ReplyDelete