கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு
(Hafeez)
மடவளை அல்முனவவரா வித்தியாலய ஆசிரியை திருமதி ரிஸானா பாரூக் உடையார் கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம் பெற்ற கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்கான மட்டுப் படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்ததன் மூலம் இவர் தெரிவாகி உள்ளார். மடவளையைச் சேர்ந்த பாத்ததும்பறை பிரதேச சபை அங்கத்தவர் றஹ்மத்துல் மலீக் அவர்களின் மனைவியான இவர் தற்போது மடவளை அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலலயத்தில் ஆங்கில ஆசிரியராகக் கடமை புரிந்து வருகிறார்.
கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் சிங்கள் மொழி மூலம்தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த இவர் பின்னர் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியரானாh.; தேசிய கல்வி நிறுவகத்தின் மேலதிக மொழி விருத்திப் பாடநெறியைப் பூர்த்தி செய்ததுடன் கல்விமாணிப்பட்டப் பட்டப் படிப்பையும் தற்போது தொடர்ந்து வருகிறார்.
இம்முறை கல்வி நிர்வாக சேவைக்கு மொத்தம் இருபத்தையாயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் தோற்றி போதும் அதிலிருந்து 159 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். அதிலும் சிறுபான்மை இனத்தவர்கள் 8 பேர் மட்டும் தெரிவாகினர் அந்த 8 பேரில் முஸ்லீம்கள் ஐவர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். மேற்படி ஐந்து முஸ்லீம்களில் கண்டி மாவட்டத்தில் நால்வரும் மாத்தலை மாவட்டத்தில் ஒருவரும் தெரிவாகியுள்ளனர். அதில் ஒருவராகவே இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் 20 வருட கற்பித்தல் அனுபவத்தைக் கொண்ட இவர் ஹூலுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று பின்னர் மடவளை மதீனா மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்து அல் முனவ்வரா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு உள்வாங்கப்பட்டவர்.
Post a Comment