Header Ads



ஜனாதிபதியிடம் இருந்து பிரியாவிடை பெற்ற பலஸ்த்தீன தூதுவர்


தமது சேவைக்காலம் முடிந்து நாடுதிரும்பவுள்ள இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.

இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோன் மூன் ஷெய் (Jong Moon Choi) மற்றும் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகா ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதியை சந்தித்து பிரியாவிடை பெற்றவர்களாவர்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலக பிரதானி காமினி செனரத் , மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனூக்கா செனவிரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

1 comment:

  1. Did he ever condemn the atrocities against the Muslims in Sl before he leaves? Never even blink an eye, but a hand shake with a smile? ahsan.

    ReplyDelete

Powered by Blogger.