Header Ads



'சம்பளம் கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம்'

"சவுதி அரேபியாவில், வீட்டுவேலை செய்யும் இந்திய பெண்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம்' என, அங்குள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. 

சவுதி அரேபியாவில், 28 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். கேரளாவைச் சேர்ந்த சில பெண்கள், ரியாத்தில் உள்ள மருத்துவமனையில், துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, ஒன்பது மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, இந்த பெண்கள், விலாசினி என்ற பெண்ணின் தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தனர். 

இதுகுறித்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்களின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் நோக்கில், சில சட்டவிரோத ஏஜன்டுகள், இந்திய பெண்களை, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்த  முயற்சிக்கின்றன. நாம், வெளிநாட்டில் வசிக்கும் போது, அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அரேபியாவின் சட்ட விதிமுறைகளை மீறி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், கடுமையான அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். இவ்வாறு, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.