சவூதி அரேபிய மாணவியின் கண்டுபிடிப்பு
(சுவனப்பிரியன்)
தாயிப் பெண்கள் பல்கலைக் கழகத்தில் நானோ துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருபவர் ஹிந்த் அப்துல் கபார். சவுதி பெண்மணியான இவர் தீயணைப்பு, பாதுகாப்பு, மற்றும் ராணுவத்தினருக்கான ஒரு உடையை நானோ துறையை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.
உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் இவரின் கண்டு பிடிப்பை பாராட்டி இவருக்கு டாக்டரேட் பட்டமும் கொடுக்கப்பட்டது. இவரது கண்டு பிடிப்பு பற்றி விவரிக்கும் போது 'இந்த உடையின் மொத்த எடையே 2.9 கிராம் தான் இருக்கும். ராணுவ வீரர்களும், பாதுகாப்பு துறையைச் சார்ந்தவர்களும் மிக இலகுவாக அணிவதற்கும், அணிந்த உடையை மிக இலகுவாக கழட்டவும் தோதான முறையில் வடிவமைத்துள்ளேன். நானோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி இந்த உடையை தயாரித்துள்ளேன். அரபுலகுக்கு இது ஒரு புதிய முயற்சி என்றே நினைக்கிறேன்' என்கிறார் மாணவி ஹிந்த் அப்துல் கஃபார்.
விழாவில் பலரும் இவரின் முயற்சியை பாராட்டி பேசினர். விழாவின் முடிவில் இவருக்கு இந்த சாதனையை நினைவு கூர்ந்து டாக்டரேட் பட்டமும் வழங்கப்பட்டது.
இஸ்லாமிய சட்ட திட்டங்களோடு வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு அந்த சட்டங்கள் வாழ்வில் சாதிக்க எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்த பெண்மணியின் கண்டு பிடிப்பு நமக்கு அறிவுரித்துக் கொண்டிருக்கிறது. இது தான் உண்மையான பெண் விடுதலை. உடையை குறைப்பது அல்ல பெண் விடுதலை.
தகவல் உதவி
Post a Comment