Header Ads



சகல மாகாணங்களிலும் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்தும் நடைமுறை

(எம்.எம்.ஏ.ஸமட்)

தனியார் பொது போக்குவரத்து பஸ்களில்  முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்தும் நடைமுறை எதிர்வரும் மாதங்களில் சகல மாகாணங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவிக்கிறார்.

தனியார் பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பயணிகள் பணத்துக்குப் பதிலாக 'இலங்கைப் பிரயாண அட்டை' எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்துவது தொடர்பான அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றது.

முற்கொடுப்பனவு அட்டை அமுல்படுத்தப்படுவது தொடர்பில் இடம் பெற்ற அறிமுக வைபவத்தில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மொபிடல் தனியார் நிறுவனம் மற்றும் மக்கள் வங்கி என்வற்றின்; கூட்டு இணைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்தும் நடைமுறை எதி;ர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சிக்கு ஒத்ததாக வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது. 

தனியார் பொதுப்போக்குவரது பஸ்களில்  பணத்திற்குப் பதிலாக பயணிகளால் பயணத்துக்கு பயன்படுத்தக் கூடிய இந்த புதிய முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்தும் நடைமுறையானது இன்னும் இரு மாதங்களில் நாட்டின் 9 மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளிடமிருந்து நடத்துனர்களிhல் பெறப்படும் பயணத்துக்கான கட்டணங்களின் மீதித் தொகைகள் பயணிகளுக்கு மீளளிக்கப்படுவதில்லை என்று அமைச்சுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும்  கிடைக்கப்பெற்ற அதிக முறைப்பாடுகளையடுத்து இந்த புதிய முற்கொடுப்பனவு மூலம் பயணத்துக்கான கட்டணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனுடாக இக்குற்றச்சாட்டு தொடர்பாக பயணிகளிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் குறையும். அத்துடன், இந்த முற்கொடுப்பனவின் மூலம் பயணத்துக்கான கடடணம் செலுத்தும் நடைமுறையானது பயணிகள் ளுக்கு பேருதவியாக அமைவதுடன் நடத்துனர்கள், பஸ் உரிமையாளர்களுக்கும் சாதகமாக அமையுமென அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

பயணிகளுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் இடையிலான தவறான புரிந்துணர்வை இப்புதிய நடைமுறையானது இல்லாமல் செய்வதுடன், இதன் முழு இலாபமும் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு இடமாற்றப்படும்.

இலங்கைப் போக்குவரத்து பஸ்கள், புகையிரதங்கள், முச்சக்கரவண்டி, பாடசாலை சேவை வேன்கள் மற்றும்  பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் சகலவற்றிலும் இம்முற்கொடுப்னவு அட்டை பயன்படுத்தும் நடைமுறை விரைவில் அமுல்படுத்ப்படவுள்ளது. 'ரீலோட்;' செய்வதன் மூலம் பயணிகள் இம்முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்த முடியும். பஸ் நடத்துனர்கள் பயணத்துகான கட்டணத்தை  பயணிகளின் இம்முற்கொடுப்பனவு அட்டையிலிருந்து பஸ்களில் பொறுத்தப்படும் இயந்திரத்தின் மூலம் கழித்துக்கொள்ள முடியும். இவ்வியந்திரங்கள் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் பொறுத்தப்படவுள்ளது.

மேலும், பயணிகள் 'இலங்கை பிரயாண அட்டை' என்ற இந்த முற்கொடுப்பனவு அட்டையை மொபிடல் தனியார் நிறுவனத்தின் நிலையங்களில்  பெற்றுக்கொள்ள முடிவதோடு ஒவ்வொரு பயணியும் இந்த முற்கொடுப்பனவு அட்டையை எதிர்காலத்தில் பயன்படுத்துவது பயனளிக்குமெனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.  

No comments

Powered by Blogger.