புலவர்மணி காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீனின் 'எல்லாளன்' காவியம் எனும் நூல் வெளியீடு
(பா.சிகான்)
புலவர்மணி காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீனின் எல்லாளன் காவியம் எனும் நூல் வெளியீடு இன்று (23) ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள கலாமுற்றம் ஓவியக்கூடத்தில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றதுடன் தொடர்ந்து கவிஞர்.கு.றஜிபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அடுத்து ஆசியுரையினை கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளும்,வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் மேற்கொண்டனர்.
நூலின் முதற்பிரதியை புரவலர்.எஸ்பி சாமி நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து ஏனையவர்களான யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி வி.பி சிவநாதன்,சட்டபீடத் தலைவர் கலாநிதி த.கலாமணி,அருட்திரு செ.அன்புராசா,சட்டத்தரணி சோ.தேவராசா,விரிவுரையாளர் இ.ராஜேஸ்கண்ணன்,ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நூலின் ஆய்வுரையை கலாநிதி நா.அகளங்கன்,நயப்புரை கலாநிதி செ.திருநாவுக்கரசு மற்றும் ஏற்புரையினை நூலாசிரியர் ஜின்னாஹ் சரிபுத்தீனும் மேற்கொண்டனர். இதன் போது இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள்
ReplyDelete