Header Ads



நாம் அரசாங்கத்துடன் இருந்தாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கிறோம் - பைஸர் முஸ்தபா

நாம் அரசாங்கத்துடன் இருந்தாலும், எங்காவது முஸ்லிம் சமூகத்துக்கென ஏதாவது பிரச்சினை ஒன்று ஏற்படுமிடத்து, அப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

இதன் ஓர் அங்கமாக, கிறேண்ட்பாஸ் பள்ளிவாசல் சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இங்கு பிரச்சினை ஏற்படும்போது முதன் முதலில் அங்கு தனி மனிதனாக நான் மாத்திரம் நின்று செயற்பட்டேன். என்னுடன் எந்தவொரு அரசியல்வாதியும் உதவிக் கரம் நீட்ட முன்வரவில்லை. நானே முன்னிலையில் தனிமையாக நின்று செயற்பட்டு, சகல பிரச்சினை களையும் அரசாங்கத்துடன் பேசி தீர்த்துவைத்தேன். இந்நிலையில் என்னை விமர்சிப்பவர்கள், தங்களை சுய விசாரணை செய்துகொண்டால், அது சமூகத்துக்குச் செய்யும் மா பெரும் நன்மையாகும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீல. சு. க மத்திய கொழும்பு அமைப்பாளருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

ஐ.ம.சு.கூ. கொழும்பு மாவட்ட வேட்பாளர் எம். எச். மன்ஸிலை ஆதரித்து, மட்டக்குளியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதியமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்தும்போது தெரிவித்ததாவது,

நாம் அரசாங்கத்துக்குள் இயங்கினாலும், முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் எந்நேரமும் கண்ணும் கருத்துமாக கரிசனையாகவே இருந்து வருகின்றோம். கொழும்பு- கிறேண்பாஸில் குழப்ப நிலை ஏற்பட்டபோதும், முஸ்லிம் மக்கள் துன்பத்தில் விழுந்து கிடந்தபோதும், நாமே அவர்களின் துக்க துயரங்களில் பங்குகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உதவிக் கரம் நீட்டினோம். கிறேண்ட்பாஸ் பள்ளிவாசல் உட்பட நாட்டின் பல பள்ளி வாசல்களில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பெளத்த இன வாதிகள் கிளர்த்தெழுந்தபோது, அந்த இடங்களுக்கு முதன் முதலாகச் சென்று எதிர்த்துப் போராடினோம். எனக்குப் பிறகே ஏனைய சில முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு வந்து போனார்கள். இதனை என்னை பத்திரிகைகளின் வாயிலாக விமர்சிப்பவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

நான் பதவி பட்டங்களுக்காகவோ, பெயர் எடுப்பதற்காகவோ ஆசைப்பட்டவன் அல்ல. அனைத்தையும் முஸ்லிம் சமூகத்திற்காக வேண்டியே செய்து வருகின்றேன். அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பது, தனது நோக்கமல்ல. எனக்கு எனது முஸ்லிம் சமூகம் தேவை. அவர்கள் சிறந்த சூழலில் நிம்மதியாக சந்தோசமாகவும் வாழவேணடும். ஏனைய மக்களை போன்ற சகல உரிமைகளையும் அவர்களும் பெற்று வாழவேண்டும் இதுவே எனது விருப்பமாகும். இது அல்லாமல் பேருக்கும் புகழுக்கும் தம்பட்டமாடுவது எனது நோக்கமல்ல என்றார். வேட்பாளர் மன்சிலும் இங்கு உரைநிகழ்த்தினார்.

6 comments:

  1. Is it true mr faizer.when the halal proble came that time where r u.when the mosque make damaged that time where r u.when the abaya/nikab issue and nic issue time where r u.
    one day will come to everypne that day u will feel so sir just think about our ummath

    ReplyDelete
  2. யோ, என்ன பேசி என்ன பன்ன, நீங்கள் யார் என்பதை நாங்களும் பார்க்கின்ரோம். ஜஃப்னா முஸ்லிம் இணய தளத்தை இல்ங்கயில் தடைசெய்ததய் தவிர உருபடியாக எதை செய்தீர்கள்? எல்லாம் வாய் வித்தை.....

    ReplyDelete
  3. The heading tells me that eventhough you are with the Govt, you are solving Muslims' problems?? In other words, you are telling me that your govt may not want to care???
    You are the Presidents' lawyer. You answer to me sir!

    ReplyDelete
  4. why you came out from kandy? can you go to akurana?

    ReplyDelete
  5. வாய் கூசாமல் பொய் சொல்லும் நம் அரசியல் வாதிகள் இப்போ அதிகறித்துவிட்டார்கள்.

    பள்ளி பிரச்சினையை பேசி என்ன முடிவு எடுத்தீர்கள்?இன்னும் பல பள்ளிகள் உடைக்கபடவா உங்களது பேச்சு இருந்தது?ஆக்கபூர்வமான பேச்சுக்களை பேசுங்கள்,அழிவுபூர்வமான வீன் வெட்டிப்பேச்சுக்களை பேசாதீர்கள்.முஸ்லிம் என்ற லேபலை தவிர வேறொன்றுமில்லை நம்மவரிடம்.

    ReplyDelete
  6. Neer ethai klitheer makkalukku theriyum inium muslim kalai ematrathe ?

    ReplyDelete

Powered by Blogger.