அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு புதிய கட்டிடம்
(அஸ்ஹர், ரமீஸ்)
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் நேற்று (28) மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றசீக் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்த வைத்தார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் சிரேஷ;ட பிரதிச் செயலாளர் அப்துல் மஜீட், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி, சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட திணைக்கத் தலைவர்கள் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பெரும்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment