ஞானசார தேரருக்கு, மனிதர்களுக்கு தான் செய்யும் அடாவடித்தனம் தெரியவில்லையே..!
(சத்தார் எம். ஜாவித்)
இலங்கையில் 97 வீதமான மக்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெறுப்பவர்களாக இருக்கையில் மதவாதமும் இனவாதமும்தான் வேண்டும் அதைத்தான் நாங்கள் செய்வோம் என்று கங்கனங்கட்டிக் கொண்டிருக்கும் பொதுபல சேனா இன்று புதிவிதமான கருத்துக்களைக் கூறி அப்பாவி பௌத்த மக்களை வன்முறையாளர்களாகவும், பௌத்தத்தை சண்டித்தனமான மார்க்கமாகவும் படம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு மனிதநேயமற்ற காட்டுமிராண்டிச் செயற்பாட்டாளர்கள் இன்று மாமிச உயிர்களைப் பற்றியும் அவை அனுபவிக்கும் வலி பற்றியும் பேசுவது நகைப்பபுக்கிடமான செயற்பாடுகள் மட்டுமல்லாது கேலிக்கூத்தான விடயமாகவும் நோக்கப்படுகின்றது.
காரணம் மனிதனாகப் பிறந்து சமயத் துறவியாக அரசினதும் பொதுமக்களினதும் பணத்திலும் உதவியிலும் கற்று விட்டு இன்று முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மைச் சமயங்களுக்கும் எதிராகவும் தமது சமயத்திற்கே சாபக்கேடான அருவருக்கத்தக்க எண்ணிலடங்காத செயல்களைச் செய்துவிட்டு ஐந்தறிவு ஜீவராசிகளின் விடயத்தில் கவலைப்படுவது ஆடு நனைகின்றது என ஓணாய் அழுத கதையாகவே அமைகின்றது.
இவ்வையகத்தில் இறைவன் அனைத்தையும் மனிதனுக்கே படைத்துள்ளான் அவற்றை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு வேறு வகையில் சிந்திக்கும் சிந்தனையில்லா மனிதர்களாகவே மேற்படி அமைப்பினரை சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் மக்கள் நோக்குகின்றனர்.
மாடறுப்பது மிருக வதையென்றால் ஏன் மற்றய உயிரினங்களான பறவைகள், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் எல்லாவற்றையும் கொன்றுதானே நாம் உண்ணுகின்றோம் இவ்வாறு னொன்று தின்னும் உயிரினங்களை எந்தவகையான வதைக்குள் வரும் என பொதுபல உள்ளிட்ட இனவாதிகளிடம் மார்க்க அறிஞர்கள் கேட்கின்றனர். பொதுவாக எல்லாமே உயிரினங்கள்தான் அதற்காக மாடு மட்டும்தான் உயிராக கருத முடியாதல்லவா? ஏன் இந்தவிடயம் முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுபவர்களுக்கு விளங்க வில்லையா?
அதுமட்டுமல்லாது காடுகளில் வாழும் காரடி, புலி, சிங்கம் போன்றவை ஏனைய மிருகங்களை எவ்வாறு கொன்று உண்ணுகின்றது என்பதை அறியவில்லையா? ஏன் மிருகக் காட்சி சாலையில் மாமிச உயிரினங்களுக்கு என்த மிருகங்களைக் கொன்று உணவு வழங்குகின்றனர் என்பதனை இந்தச் சந்தர்ப்பத்தில் பொதுபலவிடம் மக்கள் கேட்கின்றனர்.
இவ்வாறான முட்டாள் தனமான மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதென்றால் அது புதினமான விடயமாகவே காணவேண்டும். இறைவன் மனிதனுக்காக படைத்தவற்றை மனிதன் பயன்படுத்தா விட்டால் இந்த பூமியே தாங்காது உயிரினங்கள் வாழ்வதற்கு அந்த வகையில்தான் இறைவன் பூமியில் மனிதர்களுக்கு வாழ்வதற்கு ஒரு சுழற்சி முறையான ஆக்கல் அழித்தல் வழி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளான். இதுவே இயற்கையின் வடிவமைப்பாகும்.
மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற நல்ல சிறந்த போதனைகளையே இஸ்லாம் மானிட வர்க்கத்திற்கு எடுத்தியம்பி இருக்கின்றது ஆனால் ஞானசார தேரரின் மிருக உயிர்ப்பலி வலி தம்மால் முஸ்லிம் சமுகம் மட்டுமல்லாது ஏனைய அனைத்து சமுகங்களுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக மேற் கொண்டு வந்த அடாவடித்தனமான செயற்பாடுகளால் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வலி எப்படி இருக்கும் என்பதைக் கூட விளங்கிக் கொள்ளாத புத்தி கெட்ட மாமேதையாக ஞானசார தேரர் இன்று சமுகத்தினால் காணப்படுகின்றார்.
சமய விதண்டாவாதத்தை விதைத்து வரும் ஞானசார தேரர் தனது மார்க்கம் உண்மை என்றால் எத்தனைபேரை அவர் பௌத்த மதத்திற்கு எடுத்துள்ளார் என்றால் அது பூச்சியத்திலும் பூச்சியம்தான் என்பதே விடை. இந்தளவிற்கு ஒரு சமயத்தை கொண்டு நடத்த முடியாத ஒரு நபர் ஒரு சொற்ப அப்பாவி மக்களை தான் உட்பட விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில சண்டியர்களை தமது கைக்குள் வைத்துக் கொண்டு சட்டத்தையும், நீதித் துறையையும் அவமதித்துக் கொண்டு மக்களே அச்சமடையும் விதத்தில் விகாரமடைந்த தோற்றத்துடன் மக்கள் மத்தியில் தற்போது கிண்ணஸ் சாதனைக்காக துடிக்கின்றார் இவரின் செயற்பாடுகள் அதாள பதாளத்திற்கு செல்வதற்கான ஒரு கிண்ணஸ் சாதனைக் கட்டமாகவே நோக்க வேண்டியுள்ளது. காரணம் அந்தளவிற்கு சிறுபான்மை முஸ்லிம், தமிழ் மற்றும் கத்தோலிக் மக்களை சமய ரீதியாக வஞ்சித்து பலிவாங்கி வருகின்றார்கள்.
மஞ்சல் ஆடைக்குரிய கௌரவமும் மதிப்பும் இன்று அவர்களாலேயே கிளித்த எறியப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டு வருவதுடன் மக்கள் மஞ்சல் ஆடைகளைக் கண்டால் வெறுப்படையும் ஒரு யுகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விடயம் தன் கையாளேயே தனக்கு மண்ணை அல்லித் தூவும் ஒரு விரும்பத்தகாத செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஞானசார தேரரைப் போன்ற மற்றொருவர்தான் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவரும் சாதாரண ஆளில்லை இவரும் இனவாதத்தை விதைத்து வரும் மற்றுமொரு கொடிய நாகம் இவர் அரசுடன் இருந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர் அரசாங்கத்தின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு அரசுக்கு உள்ளும் அரசுக்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கு எதிரா விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் ஒருவர்.
இவரும் ஒரு பதிய கண்டு பிடிப்பை கண்டுபிடித்துள்ளார் அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரா அவரின் இயற்கையான சுயரூபத்தில்தான் தனத கருத்தை மாமேதைபோல் வேசம்போட்டுள்ளார். அவர் பள்ளிகள் தாக்கப்படுவதற்கு பௌத்தர்கள் காரணமில்லையாம் மாறாக முஸ்லிம்கள்தான் காரணமாம் இதுதான் இன்றைய வேடிக்கையானதும் புதுமையானதுமான கதை இந்தக் கதை எந்தளவிற்கு முட்டாள்தனமான கதை என்பதை சொல்லியா? ஆகவேண்டும்.
தம்புள்ளை தொடக்கம் தெஹிவலை பள்ளி வரை பகிரங்கமாக காவி உடையுடன் உடைத்தவர்களை சம்பிக்க கண்ணாடியைக் கழற்றிவிட்டுத்தான் பார்ததுள்ளமை இங்கு புலணாகின்றது இவரின் கதை பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடிப்பதுபோன்ற கதையாகவே உள்ளது.
அவர் கூறும் காரணம் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டைபிடிப்பதால் தான் பள்ளிகள் உடைக்கப்படுகின்றனவாம் அதுமட்டுமல்லாது இன்று முஸ்லிம்களுக்கு சொல்லாலும், செயலாலும் செய்யாத அநியாயங்களை எல்லாம் செய்து விட்டு தற்போது முஸ்லிம் தலைவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்து மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத் முனைவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இன்று யார் போராட்டத்தை ஏற்படுத்த முனைகின்றனர்? இவ்வாறு இனவாதத்தை விதைத்து புதியதொரு இரத் ஆறு ஓடுவதற்கான யுகத்தையல்லவா இவர்கள் ஏற்படுத்த விளைகின்றனர்.
முஸ்லிம்கள் போராட வேண்டுமானால் எப்போதே போராடி இருப்பார்கள் அதுமட்டுமல்ல இதற்காக உலக நாடுகளையே நாடியிருக்கலாம் அப்படி ஒன்று நிகழ்ந்தால் நிலைமை எப்படியிருக்கும்? அப்படியொன்று இன்று இருந்திருந்தால் பொதுபலவும் வந்திருக்காது, இராவணபலவும் வந்திருக்காது பாட்டாலியும் இனவாதக் கருத்தக்களை கக்கி இருக்கமாட்டார். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அவ்வாறான விதண்டாவாதங்களை விரும்பியவர்கள் அல்லர் மாறாக புனித இஸ்லாம் காட்டிய ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம், விட்டுக் கொடுப்புக்கள், தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், பேசித் தீர்த்த்தல் போன்ற நற்பண்புகளின் அடிப்படையிலேயே அன்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இதுவே வரலாறு.
ஆனால் இன்று இலங்கையில் அப்பாவிகளை சிறுபான்மை மக்களுக்க எதிராக சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கான கருமித்தனச் செயற்பாடுகளே பெரும்பான்மை என்ற அகங்காரத்தால் சில தீய சக்திகள் முனைப்புகளை மேற் கொள்கின்றன இவ்வாறான செயற்பாடுகள் ஆக்கபூர்வமானவையானவை அல்ல என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வதே சிறந்த செயலாகும்.
மாறாக நாங்கள் சீண்டுவோம் என்றால் சிலவேளைகளில் சமுகங்கள் இந்த நாட்டில் கவலைப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்பட்டு விடலாம் இந்தவகையில் சாமானத்தை விரும்பும் புத்தி ஜீவிகள் சிந்தித்து செயற்பட்டு மேற்படி இனவாதக் குழுக்களின் செயற்பாடுகளை ஒன்றினைந்து தடுக்க முன்வரவேண்டும்.
அரசாங்கம் செய்யும் என்ற கனவை உதறித் தள்ளிவிட்டு செயற்படுவதே பத்திசாலித் தனமான செயற்பாடாக அமையும். இதுவரை காலமும் கண்முன்னே பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்தேறியபோதும் அரசு கண்டு கொள்ளவில்லை மாறாக இன்றும் கூட ஒன்றும் நடைபெறவில்லை என்று கூறுவது வேடிக்கையானது. இதற்கு நல்ல உதாரணம் கடந்த 26ஆம் திகதி இரவு தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மீண்டும் இனவாத தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டு தாக்கியமையை இங்கு சுட்டிக்காட்டலாம். இவ்வாறான சண்டித்தனமான செயற்பாடுகளை இவர்கள் தொடர்ந்து செய்துவருவது யாருடைய தப்பு? யார் இவர்களை கட்டுப்படுத்தவேண்டும்?
ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை சமயங்கள் ஒற்றுமையாக இருக்கின்றது என்பதனை கூறுகின்றார்கள் இது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதல்லவா இவ்வாறு வாயால் சொல்லித் தப்ப முடியுமா? விடயங்கள் தாராளமாகவே பகிரங்கமாக சவாலுக்கு சவாலாக இடம்பெற்ற வன்னமேயுள்ளன.
ஞானசார தேரர் தமக்கெதிராக வழக்குப்போட்டால் நீதி மன்றத்துக்கே செல்ல மாட்டோம் என்ற கருத்தை தெரிவித்திருப்பது போன்ற விடயங்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் தான்தான் காவி உடையணிந்த சண்டியன் என்பதையும் சட்டம், நீதி, பாதுகாப்பு எல்லாவற்றிற்கும் சவால்விடும் கட்டுப்படாத் தன்மையும் தான்தான் நாட்டின் தலைவர் என்பதனையல்லவா காட்டி நிற்கின்றது இவையெல்லாம் சமுகத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் மேற்படிக் கருத்துக்களை பார்க்கும்போது இந்த நாட்டில் தேர்தல்கள் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு? ஜனாதிபதி எதற்கு? நீதி மன்றங்கள் எதற்கு? பாதுகாப்புத்துறை எதற்கு? என்ற சகலதும் கேள்விக் குறியாகவே அமைகின்றது. இவ்வாறு இவர் இனவாதத்தை கையில் வைத்துக் கொண்டு பேசுவதற்கு யார் அதிகாரத்தையும், துணிச்சலையும் வழங்கியது? என்பதில் சந்தேகம் உள்ளதல்லவா உண்மையில் அரசின் உச்சக்கட்ட ஆதரவே இதற்கு முக்கிய காரணமாகும் என்பதே உண்மையென புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் பதுங்கியிருந்து விட்டு தற்போது கூவுவதெல்லாம் இனவாத அடையாளங்களே, ஒரு மனிதன் சமயப் போதகனாக கற்றால் அவன் எந்தவிதத்திலும் அந்தச் சமயத்தின் ஒரு முக்கிய நம்பிக்கைக்குரிய போதகனாகவே இறைவானாலும் மக்களாலம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றான் ஆனால் இன்று பொதுபல சேனா இறைவனுக்கு மாற்றமான பஞ்சமா பாதகமாக உருவெடுத்துள்ளதையே காட்டி நிற்கின்றது.
இவ்வாறு மனித நேயம், மதப்பற்று அற்றவர்கள் அப்பாவி மக்களிடத்தில் தேவையற்ற பொய்ப் பிரச்சாரங்களை செய்து அவர்கள் மூலம் சமுகங்களுக்கு இடையில் வேற்றுமைகளை வளர்ப்பவர்களாக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தம் ஒரு தீவிரவாத அமைப்பாக இருக்கின்றது என மக்கள் அவர்கள் மீது விஷனப்படுகின்றனர்.
எனவே சமாதான விரும்பிகள் ஒன்றினைந்து இனவாதிகளை ஓரங்கட்டாத வரை இலங்கையில் சமயங்களின் ஒற்றமையைக்கான காண்பது காணல் நீரான விடயமே என்பதை கருத்தில் கொண்டு சமுகச் செயற்பாட்டாளர்கள் அரசியலுக்கு அப்பால் செயற்பட வேண்டியதொரு தேவையே தற்போது ஏற்பட்டுள்ளது.
Post a Comment