மடவளை அல் முனவ்வரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி
இன்று எல்லாவற்றிற்கும் அரசையே நம்பி இருக்க முடியாது. எமது எதிர்காலம் இன்றைய சிறுவர்கள் கையிலேதான் தங்கியுள்ளது என்று மத்திய மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்தார். (4.3.2014) மடவளை அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தின் இரண்டாவது வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதயாகக் கலந்து உரையாற்றும போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று நான் மத்திய மாகாண சபையில் ஒரு அங்கத்தவனாக இருப்பதற்கு கண்டி மாவட்ட வக்களர்களில் விசேடமாக உதவிய வாக்காளர்கள் உள்ள ஒரு பிரதேசத்தில் இடம் பெறும் வைபவத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எனது சொந்த இடமான உடுநுவரையை நேசிப்பதை விடக் கூடுதலாக மடவளையை நேசிக்கிறேன். காரணம் கடந்த மாகாண சபைத் தேர்தலில் எனது சொந்த ஊரான உடுநுவரை செய்யாத உதவியை மடவளை மக்கள் செய்தார்கள்.
இதன் காரணமான மடவளைக்கு உதவுவதில் நான் என்றும் பின் நிற்க மாட்டேன். அது மட்டுமல்ல, மடவளையைச் சேர்ந்த சில அமைப்புக்ககளும் பொது அமைப்புக்களின் அங்கத்தவர்களும் தனி நபர்களும் என்னுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தமது ஊரின் தேவைகளை எடுத்துக் கூறுகின்றனர். இதனால் இவற்றை உதரிவிட்டு என்னால் தப்பிச் செல்ல முடியாது.
அத்துடன் மடவளை மக்கள் எதனையும் நேரம் தவறாது உரிய நேரத்தில் கச்சிதமாககச் செய்பவர்கள். இதனை நான் விரும்புகிறேன். எனவே தொடர்ந்தும் எமது உதவிகள் இவ்வித்தியாலயத்திற்கு உண்டு. ஏற்கனவே நீங்கள் 60 இலட்ச ரூபா பெறுமதியான ஒரு கட்டிடத்தை சொந்த செலவில் கட்டி முடித்துள்ளீர்கள். இது ஒரு நல்ல முன் உதாரணம். இன்று எல்லாவற்றிற்கும் அரசையே நம்பி இருக்க முடியாது. சில குறிப்பிட்ட பாடசாலைகளில் பாடசாலையை மட்டுமல்ல அப்பாடசாலையில் வகுப்பு ரீதியாக அபிவிருத்திகளைக் கூடச் செய்வதற்கு தனிக் குழுக்கள் அமைத்துள்ளார். அது போன்று மடவளை மக்களும் தனிக்குழுக்களை அமைத்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவ முன் வரவேண்டும் என்றார்.
இன்று கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போல் விளையாட்டும் முக்கியமானதாகும். பேற்றோர் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதாது. விளையாட்டும் தேவை. விளையாட்டு இல்லா விட்டால் நோயாளர்களாகி விடுவர். எமது எதிர் காலம் இன்றைய சிறுவர்கள் கையிலேதான் தங்கியுள்ளது. சில கிராமங்களில் அவ்வாறு தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் எமது சிறார்களின் பாடசாலைகளத் திரும்பிக் கூடப் பாhப்பதில்லை. இது தவறான எண்ணக் கருவாகும்.
இப்பாடசாலை மைதான அபிவிருத்திக்கு ஏற்கனவே ரூபா 10 இலட்சம் வழங்கப்ப்டுள்ளது. எதிர் காலத்தில் இன்னும் 25 இலட்சம் வழங்க உள்ளோம். இது மட்டுமல்லாது காலத்திற்குக் காலம் நிதி ஒதிக்கித் தருவோம் என்றார். வித்தியாலய அதிபர் ஜே.பவுசுர் றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற இவ்வவைபவத்தில் இன்னும் பலர் உரையாற்றினர்.
Post a Comment