மாணவர்களுக்கு புகை பிடிக்கும் இடைவேளை விடும் இங்கிலாந்து பாடசாலை
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பீட்டர்பரோ பகுதியில் கற்றல் திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான ஹனிஹில் பள்ளி உள்ளது.
இங்கு பயிலும் சுமார் 200 மாணவர்களில் 14 வயதுக்குட்பட்ட சிலருக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை புகை பிடிக்க அனுமதி அளித்திருக்கும் தகவல் பெற்றோரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் வகுப்பறைக்குள் நுழையும் போதே மாணவர்களிடம் இருந்து சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளும் தலைமை ஆசிரியை, வகுப்புகளுக்கிடையே சிகரெட் பிடிப்பதற்காக தலா 10 நிமிடங்கள் வீதம் 2 முறை இடைவேளை விடுகிறார்.
இந்த செயலை நியாயப்படுத்தும் அவர், 'சிகரெட்டை முற்றிலுமாக தடுப்பதை விட இந்த அனுகுமுறை நல்ல பலனை தந்துள்ளது. வகுப்புகளுக்கு 'கட்' அடித்து விட்டு புகை பிடிப்பதில் ஆர்வம் காட்டும் மாணவர்களை எங்களது கண்காணிப்பில் ஒரு நாளைக்கு இரண்டு முறை அனுமதிப்பதில் தவறேதும் இல்லை' என்கிறார்.
ஆனால், பெற்றோர் தரப்பிலோ... 'மாணவர்களை சீர்படுத்த வேண்டிய பள்ளி, விருப்பத் தேர்வுக்கு இடமளிப்பது தவறு. பழக்கங்களை தேர்வு செய்யும் வயதை அடையாத சிறுவர்களிடம் கண்டிப்பு காட்டி, பள்ளியின் ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வைத்து, ஒழுக்கமான குடிமக்களாக உருவாக்குவது தான் பள்ளிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்' என்று கூறுகின்றனர்.
Post a Comment