Header Ads



கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைத்தளங்கள் மூலம் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலையை திறந்து வைக்கும் வைபவத்தில் இன்று 08-03-2014 மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயன்படுத்தி விழிப்புணர்வு திட்டங்களை முனைப்புகளை அமெரிக்க தூதரகம் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளின் அடக்குமுறை அரசாங்கங்களை பதவியில் அகற்ற சமூக வலைத்தளங்கள் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டன.

அதேவிதமான முயற்சிகள் இலங்கையிலும் மேற்கொள்ளப்படலாம் என அரசாங்கம் அஞ்சி வருகிறது.

No comments

Powered by Blogger.