சுவிஸ் விமானம், விபத்திலிருந்து தப்பியது
சுவிஸ் விமானம் தரையேற்றத்தில் விபத்து நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் விமான நிலையத்திலிருந்து சுவிஸ் தலைநகர் ஜெனிவாவிற்கு புறப்படும் சுவிஸ் சர்வதேச விமான ஏர்லைன்சின் Jet Avro-RJ-100 என்ற விமானம் மொத்தம் 74 பயணிகளுடன் பயணிக்க தயாராய் இருந்துள்ளது.
அப்போது திடீரென இன்ஜின் பழுதடைந்ததால் விமான தரையேற்றத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நான்கு பேர், உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனால் மூன்று மணிநேரம் லண்டன் விமான நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து மைக்(28) என்ற பயணி கூறுகையில், விமானத்தின் இன்ஜின் பழுது காரணமாக அதை புறப்படும்போது பெரும் சத்தத்துடன் நெருப்பு வந்தது என்றும் இச்சத்ததால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடத்தொடங்கினர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஜின் பழுதின்போது விமானத்தை வேகமாக இயக்கியதே இவ்விபத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மேலும் இவ்விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Post a Comment