கொழும்பில் வாழும் வடக்கு முஸ்லிம்களுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு
கொழும்பில் வாழும் வடமாகாண முஸ்லிம்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று வெள்ளவத்தை டபிள்யு ஏ சில்வா மாவத்தையில் உள்ள காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முதற்தடவையாக கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடுவது குறித்த பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதித் தலைவர் கலாநிதி யூசுப் கே மரைக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், வடமாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், ஜயதிலக்க எட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment