Header Ads



புலிகளால் கொடூரமாக படுகொலையுண்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை ஜனாதிபதி ஆணைக்குழுவினர் பார்வை (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 12-07-1990 காலப்பகுதியில் பாசிச விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்  தலைவர் மெக்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான குழுவினர் 22-03-2014 சனிக்கிழமை மாலை அவ்விடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்  29-11-2013 திகதி காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 112 முறைப்பாடுகளை கையளித்த பின்னர் விடுத்த  வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அக் குழுவினர் குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 3 இடங்களை பார்வையிட்டதோடு அவ்விடங்ளை தோண்டுவதற்கான நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு இது சம்மந்தமாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள 24-03-2014 திகதி திங்கட்டகிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமூகமளிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.



1 comment:

  1. கிழக்கு மாகாணம் முழுக்க பிள்ளையானுக்கும் கருணாவுக்கும்தான் பொறுப்பு கொடுக்கப்பட்ட இடங்கள்.இது தொடெர்பாக விசாரனைகள் தேவையின்,அவர்கள் இருவரையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.ஆனால் யாரும் செய்யமாட்டார்கள்,காரணம்,அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.