காத்தான்குடியில் பேரித்த மரங்களுக்கு பாலை கட்டும் நிகழ்வு - படங்கள் இணைப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் என்னக்கருவில் உருவான மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேளைத்திட்டத்தின் கீழ் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக அறபு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதியில் 61 பேரித்த மரங்கள் நடப்பட்டுள்ள அதில் சில பேரித்த மரங்களுக்கு பாலை கட்டும் நிகழ்வு சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்றறு.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பேரித்த மரங்களுக்கு பாலை கட்டினார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும் கலந்து கொண்டார். குறிப்பாக அறபு நாடுகளில் அதிகமாக பேரித்த மரங்களுக்கு பாலை கட்டுவது போலவே காத்தான்குடியிலும் பேரித்த மரங்களுக்கு பாலை கட்டுவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஒரு அளவே இல்லையா?
ReplyDeleteபேசாம இந்த வேலையையே செய்திருக்கலாம்.