மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினரை போன்றுதான் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் - மேர்வின் சில்வா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு பின்னர், நாட்டை நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பேலியகொட பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேர்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,
பெலியத்தையில் இருக்கும் போது மேடைக்கு வருமாறு ராஜபக்ஷவினருக்கு நானோ அழைப்பு விடுப்பேன். இந்த இடத்திலும் நானே ராஜபக்ஷவினரை மேடைக்கு அழைக்கின்றேன்.
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி எனது விஷ்ணு ஆலயத்திற்கு வந்து பூஜைகளை நடத்தினார்.
நாமல் ராஜபக்ஷ இதுவரை 150 மாகாண சபைத் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றியுள்ளதாக ஜனாதிபதி மிகவும் ஆச்சரியத்துடன் என்னிடம் கூறினார்.
நாமல் ராஜபக்ஷ, ராஜபக்ஷ தம்பதியினரின் மூத்த மகன். அவர் ஒரு சட்டத்தரணி. இரண்டாவது மகன் கடற்படையில். மூன்றாவது மகன் விஞ்ஞானி. இப்படித்தான் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
இதுவே நாட்டுக்கு முன் உதாரணம். யார் என்ன கூறினாலும் நான் நாமல் ரராஜபக்ஷவை நாமல் பிரபு என்றே அழைப்பேன். அப்படி அழைக்க வேண்டாம் என அவர்களின் குடும்பத்தினரும் கூறுகின்றனர். நான் பெலியத்தை பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் அப்படி அழைக்கின்றேன்.
நாமல் பிரபுவே மேன்மைதங்கிய ஜனாதிபதிக்கு பிறகு இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்கவேண்டும் என்றார்.
இந்த அமைச்சர் பதவியைத் தக்க வைக்கவும், ஜனாதிபதியின் பிச்சைகளை விழுங்கவும் இப்போதே படர் பூசுகிறார். நன்றாகவே பூசிவிட்டு சீனியையும் தூவி விடுங்க சேர்.
ReplyDeleteஅப்ப நாளையில் இருந்து ஒங்கட சூ வுக்கு பதிலா அவங்கட சூ வ குடிக்கலாமே. ஏனென்றால் நீங்கதானே வழமையாக குடிக்கின்றீர்கள்.
ReplyDelete( மேர்வின் சில்வாவின் உண்மையான விடயம்தான் இது.)